திங்கள், டிசம்பர் 12, 2011

nenju porukkavillai

நெஞ்சு பொறுக்கவில்லை,

கொலைவெறி  எங்கும் பேச்சு ,
---உடனே எனக்கு கொலைக்காரன் பேட்டை தான் ,
 நினவு.
சென்னைக்கு வந்த புதிது.
ராயப்பேட்டையில் ஒரு பேருந்து நிறுத்தம்.
நடத்துனர்  "கொலைகாரன் பேட்டை '' இறங்கு.
கலியுகத்தில் கொலைவெறி தான். .
கண்ணகிக்கு வந்த கொலைவெறி
மதுரையை அழித்த காதை.
கொலைவெறியுடன்  இருக்கும்
வில்லன்கள் இல்லா கதை..
சின்னத்திரையிலும்
 பெரியதிரையிலும்..
இல்லை இல்லவே .இல்லை.

வெறி என்பது வெறுக்கப்படும்
விஷயமா? சுனாமியில் எதிர்நீச்சல்,
போடும் தைரிய சாலிகளுக்கு.
மழலைகள் பெரியவர்கள்  முன்
ஆடும் ஆட்டமே வெட்டுக்குத்து.
காவல் துறையின் கையாலாகத்தனம்,
கருங்காலிகள் காவலர்களில் என்று
காட்டா கதை உண்டா?
சமுதாயத்தைக்கெடுக்கும்,
கொலைவெறி கதைகள்.
திருமணமான   மாஜி காதலனை
அடைய  கொலைவெறி  மாஜி  கா.. த.. லி.
இதை கண்டிக்காத கூட்டம்,
.பிள்ளை குட்டி பெத்துகிட்டு தாலி கட்டலாமா?
என்ற பாடலை கண்டிக்காத கூட்டம்,
செருப்பு போட்டுனடந்தா,கற்பு பற்றி பேசுறா,
என்று வழக்கு. எதிர்ப்பு  
ஆண்கள் படிப்பதில்லை.
 படிக்காத நாயகர்கள்,
கடத்தல்,காவல்துறை செய்ய இயலா,
குற்றவாளிகளை அடக்கி சமுதாயம் காத்தல்,
கொலைசெய்து கோடீஸ்வரன் ஆதல்.
ரசிக்கும் கொலைவெறி.
இதுவே கொலைவெறி  ரசிக்க வைக்கிறதோ.
நெஞ்சு பொறுக்கவில்லை  இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து விட்டால்,
மகாகவி காண்ணீர் ஆறாகப்  பெருகும்  கொலைவெறிப் பாடல்.
நெஞ்சு அமைதி இல்லை  காரணம்  நஞ்சு விதைக்கப்படுகிறது.
.

 




கருத்துகள் இல்லை: