ஆண்டுகள் கூட அகவை கூடும்.
அகவை கூட வாழ்நாள் குறையும்.
வாழ்நாளில் செய்த நன்மைகள்,
வயதான காலத்தில் அமைதி தரும்.
தீய காரியங்கள் தனிமைப்படுத்தி,
மன அமைதி எரிக்கும்.
கடன் பட்ட நெஞ்சம் கலங்கும்.
கடன் என்றால் மற்றவர்களிடம்
பெற்ற துகை மட்டும் அல்ல.
பெற்ற கடன்,பிறந்த கடன்,
வளர்ந்த கடன்,வளர்த்த கடன்,
வீட்டுக்கடன் ,ஊர்க்கடன் ,
நட்புக்கடன்,நாட்டுக்கடன்,
கடமை யாற்றும் கடன்,
சமுதாயக்கடன் ,
தெய்வக்கடன்,
குரு கடன்,
கல்விக்கடன்,
தாய் தந்தைக்கான கடன்,
இந்தக்கடன்கள் இனிதே
தீர்த்திருந்தால்,
அகவைகூட அமைதிகூடும்.
கடமைகள் தவறியிருந்தால்.
கடமைகளில் கள்ளத்தனம்
இருந்தால் கடைசி அகவையில்
கண்ணீர் அலை துன்ப அலை
மாறி மாறி சிறிய பெரிய அலைகள்
வீசிக்கொண்டே இருக்கும்.
அதனால் தான் கீதையில்
கடமையைச் செய் பலனை எதிர் பாராதே
என்றார் பரமாத்மா.
ஆசையற்ற செயல் புரியும் மார்க்கம் .
பணம் சொத்து பங்களாக்கள் தோட்டம்
அனைத்தும் இருந்தாலும்,நீண்ட துயில்
நிச்சயம் வரும்,மீளாத்துயில்,
அப்பொழுது உடன் எதுவும் வராது.
பட்டினத்தார் பட்ட அனுபவம்
பாடிய பாடல்.
அகவை கூட வாழ்நாள் குறையும்.
வாழ்நாளில் செய்த நன்மைகள்,
வயதான காலத்தில் அமைதி தரும்.
தீய காரியங்கள் தனிமைப்படுத்தி,
மன அமைதி எரிக்கும்.
கடன் பட்ட நெஞ்சம் கலங்கும்.
கடன் என்றால் மற்றவர்களிடம்
பெற்ற துகை மட்டும் அல்ல.
பெற்ற கடன்,பிறந்த கடன்,
வளர்ந்த கடன்,வளர்த்த கடன்,
வீட்டுக்கடன் ,ஊர்க்கடன் ,
நட்புக்கடன்,நாட்டுக்கடன்,
கடமை யாற்றும் கடன்,
சமுதாயக்கடன் ,
தெய்வக்கடன்,
குரு கடன்,
கல்விக்கடன்,
தாய் தந்தைக்கான கடன்,
இந்தக்கடன்கள் இனிதே
தீர்த்திருந்தால்,
அகவைகூட அமைதிகூடும்.
கடமைகள் தவறியிருந்தால்.
கடமைகளில் கள்ளத்தனம்
இருந்தால் கடைசி அகவையில்
கண்ணீர் அலை துன்ப அலை
மாறி மாறி சிறிய பெரிய அலைகள்
வீசிக்கொண்டே இருக்கும்.
அதனால் தான் கீதையில்
கடமையைச் செய் பலனை எதிர் பாராதே
என்றார் பரமாத்மா.
ஆசையற்ற செயல் புரியும் மார்க்கம் .
பணம் சொத்து பங்களாக்கள் தோட்டம்
அனைத்தும் இருந்தாலும்,நீண்ட துயில்
நிச்சயம் வரும்,மீளாத்துயில்,
அப்பொழுது உடன் எதுவும் வராது.
பட்டினத்தார் பட்ட அனுபவம்
பாடிய பாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக