புதன், டிசம்பர் 21, 2011

mana amaithikku mathangalin saaram

மனித மனம் மட்டும் கட்டுப்பாட்டில் இருந்தால்
வையகத்தில் சுவர்கலோகம் காணலாம்.
மனம் எப்பொழுதும் வேகமாக கற்பனை செய்கிறது.
அந்த மனம் காணும் கனவு
செயல்  படுத்த முடியவில்லை என்றால்
  அந்த கனவுகள் பொய்த்துவிட்டால் மனிதன் படும் வேதனை .  அவன் மன எண்ணங்கள் வெற்றிபெற அவன் போடும் திட்டங்கள்
 அவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றுகிறது.
அறிவியல் மேதை கனவானாலும்.
ஆன்மீக சுவாமிகள் கனவானாலும்
அதில் வெற்றிபெற்ற மனிதன்
 மனம் தீய எண்ணங்களுக்கு ஆட்படுவதே
உலகத்தில் அமைதி இன்மைக்கு காரணம்.
எந்த ஒரு மனிதனும்   அவனை கெட்டவன்
 என்று  சமுதாயம் சொல்வதை விரும்புவதில்லை.
இருந்தாலும் ஆலயங்களிலும் ,ஆராய்ச்சி மாணவிகளிடமும்
தவறு செய்யும் வேதம்,பைபிள் படித்த குரான்
படித்த விற்பன்னர்களும்,பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும்
 சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதற்கான காரணம் அருளைத்தேடாமல் பொருளைத்தேடுவதே.
இவ்வுலகியல் இன்ப வாழ்க்கை நாட்டமே.
தெய்வ நம்பிக்கையில் ஏற்படும் சந்தேகங்களே.
ஆண்டவன் அனைவரையும் சமமாக
நோக்குவதில்லை என்ற எண்ணம்.
இது தவறு.
சமுதாயத்தைப்பாருங்கள்.
பணம் படைத்தவர்கள் பலர் நிம்மதி இன்றி
தான் சேர்த்த செல்வங்களுக்கு ,
ஒரு செல்வன் இன்றி தவிக்கின்றனர்.
செல்வந்தர்கள் சரியான நேரத்தில்
சிகிச்சை செய்தும் பலனின்றி இறக்கின்றனர்.
மகிழுந்தில் செல்லும் சிலர்  விபத்தில் மடிகின்றனர்.
தேர்தலில் சிலருக்கு எதிர் பார வெற்றியும்
சிலருக்கு எதிர்பாரா தோல்வியும் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஒரு திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது.
.. வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லையே.
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லையே.
நோய் இன்றி நடமாடும் ஒருவன் இறந்து விடுகிறான்.
நீண்ட ஆண்டு நோயுடனே சரீர உபதையுடன் ஒருவன் வாழ்கிறான்.
சிலர் ஏழ்மையிலும் மகிழ்வுடன் வாழ்கின்றனர்.
சிலர் செல்வச்செழிப்புடன் வேதனையுடன் வாழ்கின்றனர்.
எத்தனை பங்களாக்கள் காலியாக இருளடைந்து காணப்படுகின்றன
.எத்தனை குடிசைகள் ஒளியுடன் மன மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றன.
மனம் ஒரு குரங்காக செயல் படாமல்
ஆசையின்றி கடமைகளில் ஈடுபட்டு
ஆண்டவனையே சரணடைந்தால்
அமைதி என்பது அனைத்து மதங்களின் சாரம்.  .



கருத்துகள் இல்லை: