ஞாயிறு, டிசம்பர் 04, 2011

light and god

பகவான் ஜ்யோதி ஸ்வரூபர்


அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தி யாகி அருளோடு விளங்குபவர் ஆண்டவன்.
இறைவன் ஜ்யோதி ஸ்வரூபனாக விளங்குகிறார் என்பதை அனைத்து மதங்களும் ஆணித்தரமாக போதிக்கின்றன,.மகான்களுக்கு  சிரத்தின் பின்புறம் ஒளி வட்டம் தோன்றுகிறது.
ஹோம  அக்னிப்பிளம்பில் இறைவடிவம் தோன்றுவதாக பல புகைப்பட ஆதாரச் செய்திகள் பக்தி சிரத்தையுடன்  படிக்கப்படுகின்றன.
வெற்றிடம் ஆண்டவன் இருப்பதை தேவ ரஹசியம் என்கின்றனர்.சிதம்பர ரஹசியம் என்பதும் இதைத்தான்.
இருண்ட குகையில் தவம் செய்து இறைச்செய்திகள் இறை உணர்வு பெற்றோர் அதிகம்
. தவம் கானகத்தில் செய்த ரிஷி ,முனிகள் வெற்றிடத்தில் தான் செய்துள்ளனர்.
புத்தர் ஞானம் பெற்றது போதி மரத்தின் கீழ்.

 முஹம்மது நபி ஹீரா குகையில் பைகாம் பெற்றதும்  இறைச்செய்திகளை பிரசாரம் செய்ததும்  இறைவனின் அசரீரி கேட்டதும் அங்கு ஒளி பரவியதாகவும்  படித்த ஞாபகம்
சபர்மலை மகர ஜ்யோதி,திருவண்ணாமலை மலை தீபம்,கர்த்திகைடீபம்  என ஜ்யோத்யின் முக்யத்துவம் சனாதன தர்மத்தால் விழா  வாக  கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு ஒளிமயமான ஆண்டவனைக்கண்ட வள்ளலார்
,
அருட்பெரும்  ஜ்யோதி  ,தனிப்பெரும் கருணை, அருட்பெரும் ஜ்யோதி தனிப்பெரும் கருணை :   என்கிறார்.

இறைவன் தேவ ஒளி மக்களை இரட்சிக்கட்டும் .

இவ்வாறு மதங்களுக்குள் ஒற்றுமை ஒளி   ஜ்யோதி ஸ்வரூபமான இறவன் என்று நிரூபணமாகிறது.

கருத்துகள் இல்லை: