மனித குணம்.
மரங்களில் பூவும் பழமும் பருவ காலதிர்கேற்பவே தான். (ஒவ்வொரு பழத்திற்கு ஒவ்வொரு பருவம்). அவ்வாறே ,
ஒவ்வொரு மனிதனின் நிறை குறைகள் காலத்தே வெளிப்படும்.
மனிதன் நல்லவனா கெட்டவனா என்பது சமய சந்தர்பங்களால் தான் தெரியவரும்.
तुलसी तरु फूलत -फलत ,जेहि विधि काल्हि पाय.तैसे ही गुण दोख गत ,प्रगटत समय सुभाय.
2.உடனே தள்ளி ஒதுக்க வேண்டியவை.
தீராத நாள்பட்ட நோயாளி,நித்ய தரித்திரன்,கடுஞ்சொல் பேசுவான் ,பேராசை படைத்தோன் ஆகியோர் ,
உயிருக்கு சமமான நெருங்கியவர்களாயினும் ,உடனே விலகி ஒதுக்குவதே சாலச்சிறந்தது.
दीर्घ रोगिदारीदी ,कटुवच,लोलुप लोग. तुलसी प्राण सामान तऊ ., तुरत त्यागिबे जोग.
3.பசுமாடுகள்,யானைகள்,குதிரைகள்,இரத்தின வைடூரியங்கள் ஆகியவை அள்ள அள்ள குறையாத செல்வமாக இருப்பினும் ,
மகிழ்ச்சி திருப்தி இல்லா நிலையில் அனைத்தும் தூசிக்கு சமமே.
गो धन ,गज धन,बाजी धन ,रतन धन खान,जब न आवे संतोष धन सब धन धुल समान
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக