சனி, நவம்பர் 12, 2011

thevai oru puratchi

தேவை ஒரு புரட்சி                                              

 தமிழ் கடவுள் தாசர்,
திருப்புகழ் படைத்தவர்,
ஆரம்ப வாழ்க்கை,
ஆசை நிறைந்த வாழ்க்கை.
தாசி வீடுகள் சென்று,
தீரா நோய்  பெற்ற வாழ்க்கை.
மனம் வெறுத்து,
திருவண்ணாமலை,
கோபுர உச்சியில் ஏறி 
உயிர் துறக்க
துணிந்த காதை.           
அவரின் பட்டறிவை
இளைய தலை முறையினர் 
அறிந்து புரிந்து 
உன்னத நோக்கை 
அடையட்டும்.       

துளசி தாசர் தொடக்க காலம்
தொடர் காமக்காலம்.
ஒரு நொடியும்
மனைவியைப் பிரியா
களங்கமான காலம்.
ஒரு பணியாக
அவர் மனைவி
தாய் அகம் செல்ல,
அகத்தில் இல்லா,
மனைவியைத் தேடி,
அவர்
மாமனார் இல்லம் செல்ல
கொட்டும் மலையில் ,
மூடிய வீட்டில்
பாம்பு தொங்க,
பாம்பையே கைராகப் பிடித்து
வீட்டினுள் குதிக்க,
கணவனின் வெறி,
அவப்பெயர் என
மனைவி சீற
சினத்தால் வெகுண்டு,
வந்த மனைவியின்
கடும்  சொற்கள்:
இந்த அகலும் அழகில்,
அழுகும் சதையில்,
அழியும் உடலில்,
உள்ள பற்றை,
உள்ளம் உருகி,
இறைவனைத் துதித்து,
முக்தி பெருக.
ஆவேசமான மனைவியின்
கூற்று.
ஆறறிவு மானுடனை,
ஞானம் பெறச் செய்தது.
அன்று முதல்,
மனைவி தாசன்
மாறினான்
இராம தாசனாக.
இராம காவியம்
படைத்தவனாக.
இன்று துளசியின்
ராமசரித  மானஸ் 
கோடிக்  கணக்கான வர்களுக்கு 
மன அமைதி தரும் நூல்.
வழிபடும்  நூல்.
வழிகாட்டும் நூல்.
வரம் தரும் நூல்.
வளம் தரும் நூல்.
பார் போற்றும் நூல்.
பாவைகளை  ஒதுக்கும் நூல்.
இளம் தலை முறையினரை
பட்டறிவால் பரவசமூட்டும்
நூல்.வாழும் கலையை
உணர்த்தும் நூல்.

கருத்துகள் இல்லை: