வியாழன், நவம்பர் 24, 2011

our treasury

நமது பாரத நாட்டில் நல்லறம் வழிகாட்ட வேதங்கள்,உபநிடதங்கள்,போன்ற பாமரர்கள் புரியாதமொழியில் ஆன்மீக அறிவியல் கருத்துக்கள். நம் தமிழ்மொழியில் திரு மந்திரம்  ,திருவாசகம்,சித்தர் பாடல்கள்,மருத்துவ நூல்கள்.எளிய மருத்துவம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் ,நாட்டு வைத்தியம்,மூலிகை வைத்தியம் ,உணவே மருந்து, என உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல நூல்கள் வெளிவருகின்றன. இதில் தனி மனித ஒழுக்கம் ,அரசியல் என பல வெளிஈடுகள் அறிவுக்களஞ்சியமாக வெளிவருகின்றன. ஆங்கிலத்தில் அறிவு வளரும் ஆங்கில அறிவு இல்லையே என்பவர்கள் இந்நூல்களைபடித்தால்   ஆரோக்யமான  உடல்,தெளிவான ,அறிவு,தெளிவான சிந்தனை, தெளிவான ஞானம், பெற்று உளம் நிறைவுடன்   மன அமைதி பெறலாம்.நாம் அதில் ஈடுபடுவதில்லை. காரணம் ஆங்கில அறிவால் பெரும் உடனடி பொருளாதார பலன்கள்.ஆங்கில மோஹம். நம் நாட்டு மொழிகளில் எதுவும் இல்லை என்ற முடிவு.

சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் அனைவரும் ஆங்கிலப்புலமை பெற்றவர்கள்.காந்தி அடிகள் தாய் மொழிக்கல்வி  முறையை வலி உறுத்தினாலும்,மற்ற தலைவர்களின் ஆங்கில அறிவு ,ஆற்றல் சமஸ்கிருதம்,
தமிழ் போன்ற செம்மொழி அறிவியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்
கொடுக்காததும்,பக்க விளைவு ஏற்படாத கசப்பான ஆயுர்வேத சித்த மருந்துகள் .பத்தியங்கள் போன்றவற்றை பொதுமக்கள் விரும்பாமல் ,  ,இனிப்பு பூசப்பட்ட கேப்சூல் மாத்திரைகள்  ஆங்கில முறையில் வந்ததுதான்.
மேலும் அரசாங்கம் நம்நாட்டுச் சிறப்புகளை பிரபலப்படுத்த முழு ஆர்வம் காட்ட வில்லை என்பதும் காரணமாகும்.
சித்த ஆயர்வேத மருத்துவப்படிப்பிற்கு மாணவர்களும் பொது மக்களும் என் ஆர்வம் காட்டவில்லை   என ஆராய்ந்து அத்துடன் சேர்ந்த ஆர்வ மூட்டாதது யார் குடாரம் அல்லது தவறு.அது மட்டுமல்ல நமது நாடு மருத்துவம் .அறிவியல் யோகக்கலை ,தெய்வீக வழிபாட்டுடன் சேர்ந்த உடற் பயிற்சிகள் எள்ளி நகையாடி ஒழிக்கப்பட்டதற்கு யார் காரணம்.
வள்ளுவர் எழுதிய திருக்குறள்,உலகப்பொதுமறை என்பவர்கள்
 "வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
 துணைவலியும் தூகிச்செயல்.''
என்ற குறளை மறந்தது ஏன்?
நமது நாட்டின் சிறப்பை மருத்துவம், ஜோதிடம் ,அறிவியல் விளக்கும் தொன்மை நூல்கள் அதிகமாக விரும்பும் படி செய்யாதது ஏன்//?
அண்ணாவின் வழியில் வந்தவர்கள் ஒரே அணியில் திரண்டு அல்லது காந்தி வலி வந்தவர்கள் ஒரே அணியில் திரண்டு சுநலம் இன்றி ,ஆணவம் இன்றி
சுரண்டல் இன்றி ,ஊழல் இன்றி நாட்டு நலம்எ வீட்டு நலம் என்று கருதி
தன் தலைவர் காட்டிய வழியில் செல்லாமல்  ஒரு தலைவர்  அவரை மையமாகக்கொண்டு பல தலைவர்கள்,பல கொடிகள்  முப்பத்தொன்பது  சதவிகிதம் வாங்குபவர்கள்  ஆளும் கட்சி அவர்களை விரும்பாத அறுபத்தொன்பது  சதா விகிதம் எதிர்க்கட்சி.
நாடு விடுதலை அடைந்து    அரை நூற்றாண்டகியும் இன்னும் கல்விக்கொள்கை
இதுதான் என்று முடிவு செய்வதில் தாமதம் குழப்பம்  சிந்திப்பீர்கள் இளம் தலை முறையினர்களே.



/







கருத்துகள் இல்லை: