வெள்ளி, நவம்பர் 18, 2011

inraiya aanmeekam

இன்றைய ஆன்மிகம்
இன்றைய  ஆன்மிகம் வளர்ந்த நிலையில் காணப்பட்டாலும்  பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் காணப்பட்டாலும் அது ஒரு போலியாகவே
உணரப்படுகிறது.ஆன்மீகத்திற்கு ஆதாரம் அன்பு,பற்றற்ற தன்மை, எளிமை,ஆடம்பரம் இன்மை போன்றவை .எளிய குடிலில்தான்  எளிய ஆடையில் தான் ஆன்மீகத்தொடக்கம் இருந்தது.  இன்றைய ஆஸ்ரமங்களுக்குள் பணம்  படைத்தவர்களே அருளாசி பெற ,அந்தரங்க பூசை என்று தனிக்கட்டணம் பெற்று அனுமதிக்கப்படுகின்றனர்.ஆன்மிகம் மட்டுமே இன்றி மழலைப்பள்ளி முதல் மருத்துவக்கல்லூரி  வரை என்று பணம் pபொன் விளையும் ஆதார ஸ்தலம் ஆக்கப்பட்டுள்ளன.
  புத்தர்,  சங்கரர், மகாவீர,ராமானுஜர், சுவாமி  ரமணர்,ராமகிருஷ்ண  பரமஹன்சர்,போன்றோர் அச்சமின்றி வாழ்ந்தனர்.இன்றைய சூழலில் துப்பாக்கியும் ,மிக்க வலிமை மிக்கவர்கள் காவலில் ,பெரும் மதில் சுவருடன்
கறுப்புப் பணம் மிக்க கிடங்குகளாக காட்சி அளிக்கின்றன ஆஸ்ரமங்கள்.
.பல ரகஸ்யங்கள் மறைக்கப்படும் இடமாக விளங்குகின்றன.
இறைவன் முழு அருள் பெற உண்மை நேர்மை,ஒரு மன தியானம் ஒன்றே போதும்.ஆழமான த்யானம்  தான்  முஹம்மது   நபியையும் ஏசுநாதரையும் இறைத்தூதர்களாக்கியது.
பாரதத்தில் சங்கரர்,இராமானுஜர்,மத்வாச்சாரியார் புத்தர் மகாவீரர் ஷீரடி சாய் பாபா, ராகவேந்திரர் போன்றோர் மகான்களாக   தெய்வமாக   போற்றப்படுகின்றனர்.  ,
  பக்த   துருவன் இறைவனைக்கண்டான்.பக்த பிரகலாதன்     தன்  வலிமை அதிகாரமிக்க  கடவுள் வரம் பெற்ற  தந்தையை எதிர்த்து பக்தியின் மகிமையை உணர வைத்தான்.
பகுதறிவுப்பிரசார பாரதத்தில் சாமியார்களிடம் ஏமாறுவோர் ஏராளம்.அதற்காக பல கவிகள்  பக்தியின் ஆழமான தன்மையை விளக்கியுள்ளனர்.
கீதை உபதேசித்த நாட்டில் ,    ஏகபோக அதிபதிகளாக சாமியார்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பதும் ஏமாற்றுபவர்களாக இருப்பதும்
மக்களின் ஆழமான பக்தி இல்லாமை, ஆடம்பர பகட்டான போலி பக்தியை  காட்டுகிறது.
மக்கள் மனதில் இறைநாமமே போதும் துன்பங்களிலிருந்து விடுபட.
பரிகாரம் செய்தால் பாவமன்னிப்பு என்றால் நீதி சாகடிக்கப்படும்.

தாங்கள் விரும்பும் இறை நாமத்தை
உச்சரியுங்கள்.பலன் கிடைக்கும்.
பரிகாரங்கள் பின்னால் சென்று பலியாகாதீர்கள்.
அல்லாவின் பக்தர்கள் அல்லா!அல்லா!என்று தொழுங்கள் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
ஏசுவின் நாமம் ஜெபியுங்கள் இன்பங்களைப்பெருங்கள்.

இந்துக்கள் ராமா,முருகா,சிவா,துர்கா,
விநாயகா,கிருஷ்ணா, என்று இஷ்ட குல கிராம தேவதை களை நாம ஜபம்
செய்யுங்கள்.இறைவழி பாட்டில்
ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.
அன்பு, நேர்மையைப்பயன் படுத்துங்கள்;
 குறுக்கு வழியில் குறுகிய மனதுடன்,
குற்ற உணர்வுடன் பொன் பணத்தால்,
இறைவனருள் இந்த ஜன்மத்திலும் எந்த ஜன்மத்திலும் கிட்டாது .உண்மையான நாம ஜெபமே
 பரிகாரம்.

கருத்துகள் இல்லை: