சனி, செப்டம்பர் 30, 2023

இறைவணக்கம்

 இறைவணக்கம்.

 நாம் எல்லோரும் பகவான் மீது முழு நம்பிக்கை வைத்து இறைவனை வழிபடுகிறோமா?

என்று சற்றே சிந்தியுங்கள்.

 நமது எண்ணங்கள் சிதறுகின்றன.

சிதறிய எண்ணங்கள்

பத்து திக்குகளிலும் பறக்கின்றன.

மீண்டும் பத்து திக்குகளின் நிகழ்வுகள்

நம்மை எரிச்சல் அடையச் செய்கின்றன.விளைவுகள்?

ஆணவம்.

பேராசை

கோபதாபங்கள்

எரிச்சல்கள்.

கவலைகளால்

ஏற்படும் மன உழைச்சல்கள்

அழுத்தங்கள்

நட்பு, பகை

அனைத்துக்கும் உலகியல் ஆசைகள்

தான் மூலம்.

இறைவனை நாம் முற்றிலும் சார்ந்து இருப்பது அவன்தான் என சரணாகதி அடைவது 

சிலமகான்களால் தான் முடிகிறது.

 நமது மனம் லௌகீக ஆசைகளில் கட்டுண்டு இருப்பதால்

ஆத்மா பரமாத்மா என்ற அத்வைதம்

அவனின்றி அணுவும் அசையாது என்ற நிலை வருவதில்லை.

வந்தால் மனிதனுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்.   மனநிம்மதி அமைதி மனநிறைவு ஏற்படும்

கவலையில்லாமல்

அவன்தான் என்ற நிலை மகிழ்ச்சி எல்லை . …

 இறைவணக்கம்.

 பக்தி பக்தி இன்பம் பக்திசுகம் பக்தியில் ஐக்கியம்.பக்திக்காக தியாகம் ‌

ஆனால் இந்த பக்தர்களின் பெருங்கூட்டம்

இவர்களை ஏமாற்றும் 

இடைத்தரகர்கள்.

ஆலயம் சுற்றி ஏமாற்றும் கடைகள்.

நொண்டிபோல் நடிக்கும் கூட்டம்.

அநாதை போல் நடிக்கும் கூட்டம்.

கர்ப்பக்ரஹ மூலவர் தரிசனம் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள்.

வெளியே கடைகள் பல குடும்பங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக.

ஆலய அழகு மண்டபங்கள் அங்காடிகளிலாக.

விலைப்பட்டியல்  கிடையாது.

பிரசாத ஸ்டால்களில்

கூகுள் பேகிடையாது.

அதில் பக்தர்கள் பலர்

ஏமாற்றுபவர்கள் கடவுளால் தண்டிக்கப்

படுவார்கள் என்று

ஏமாந்து செல்லும்  காட்சி.

பொட்டு சந்தனம் பட்டை நாமம் போட்டு அருள் வந்தது போல் நடிக்கும் கூட்டம்.

பக்தர்கள் அவர்கள் கேட்கும் துகை கொடுத்து மகிழ்ச்சி.

லஞ்சம் கொடுத்து குறுக்கு வழி தரிசனம்.

ஆலயத்தில் பல ஏமாற்றுபவர்கள்.

அது அவர்களுக்கு தண்டனை என ஏமாறும் கூட்டம்.

 ஹிந்து பக்தர்கள் போல் வேறு யாரும் இல்லை உலகில்.

ஏமாறுவதையும் பக்தி பரவசம் என்ற உணர்வு ஹிந்து பக்தர்களுக்கு மட்டுமே.

கருத்துகள் இல்லை: