புதன், நவம்பர் 23, 2022

தியானம்

 வணக்கம்.

இன்றைய சிந்தனைகள்.


  மனிதன் நலமாக வாழ வருமானம் தேவை.

  மானம் தேவை என்ற காலம் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களுக்கு இருந்த காலம் போய் வருமானம் என்ற குறிக்கோள் நிம்மதி தருகிறது என்ற எண்ணம் தவறானதா? சரியானதா?

 பணம் படைத்தவர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனரா?

 அப்படி இருந்தால்    பரிகார ஸ்தலங்களில் கூட்டம் அதிகம்.

கருத்தரிப்பு மையங்களில் கூட்டம் அதிகம்.

ஆஸ்ரமங்களில் கூட்டம் அதிகம்.

 அங்கு அமைதி தேடி தீக்ஷை பெற பல ஆயிரம்.

முன்வரிசையில் அமர்ந்து ஆஸ்ரம ஆச்சாரியார் ஆசி பெற இரண்டு லட்சம்.

 பரிகார யாக ஹோம் அன்னதானம் பல லட்சம்.

 அங்கு புலம்பும் பெரும் தனவந்தர்கள்.

 புண்ணியம் தேடி  தானம் அளிப்பவர்கள். நோய் தீர பரிகாரம்.

மகப்பேறு பரிகாரம்.

 பணம் உள்ள இடத்தில் நோயாளிகள்.

மன நோயாளிகள்.

மன வேதனைப் படுவோர்.

 இன்றைய சூழலில் பலரிடம் பணம் உள்ளது. ஆனால் மன நிம்மதி?

ஆழ்நிலை தியானம் பயிற்சி.

 மனவளக்கலை.

 என்று ஓடும் கூட்டம் அதிகம்.

சிந்திப்பீர் பணம் ஆலய உண்டியலில்.

  அன்னதானத்தின்.

அறவழிக்கூடங்களில்.

அநாதை ஆஸ்ரமங்களில்.

 பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகர்கள் நடிகைகள். நிம்மதியான மணவாழ்க்கை உள்ளதா?

வருமானம் உள்ளது.

 நிம்மதி!

 தனிப்பட்ட வாழ்க்கையில் தனிமையில் மகிழ்ச்சி.

 பணம் படைத்தோருக்கா?

பக்தர்களுக்கா?

 ஏழைகளுக்காக?

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் 

அமைதியான மனநிலை உள்ளவர்கள் எத்தனை பேர்.

 அங்கு தான் ஆண்டவனின் சூக்ஷ்ம தண்டனைகள்.

ஆலயங்கள் ஆஸ்ரமங்களின் சோதிடர்களின் அருள்வாக்கு சொல்பவர்களின் செல்வாக்கு அதிகமாகிறது.

 இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் பக்தி.

சரணாகதி அடைந்து நீயே கதி என்ன அபிராமி பட்டர் பிரகலாதன் .

துளசிதாசர் அருணகிரி நாதர் போன்ற காமுகர்கள் மனமாற்றம்.

 இறைவனின் லீலைகள் யார் அறிவார்கள்.

அழியும் உலகில் பக்தி தர்மம் தான் அமைதி தரும்.

 அமைதி தேடி மது சாலை மாதுசாலை

நிரந்தரமல்ல.

 தியானம் தான் உயர்ந்த நிலை.

இதை உணரும் போது தான் முதுமை.

பட்டறிவு.  அதுதான் அனுபவ ஞானம்.

இது உலகியல் சாரம்.

 இன்றைய இறை சிந்தனைகள்.

சே. அனந்தகிருஷ்ணன்.சென்னை.

கருத்துகள் இல்லை: