வாழ்வதரிது.
இறைவன் அருளில் ஒளிர்வதரிது.
அறிவியல் அதிசயம்
அதைவிட ஆண்டவன்
படைக்கும்
இயற்கை அதிசயங்கள்.
இயற்கை இன்பங்கள்
தென்றல் காற்று.
கடற்கரை காற்று.
வெயிலின் கொடுமை.
நிழல் தரும் மரங்கள்.
கடல் கரையில் இனிய நீர் ஊற்று.
இனம் மொழி சாதி மதம் ஏழை பணக்காரன்
வேறுபாடின்றி கிடைக்கும்
இயற்கை இன்பங்கள்.
இல்லற சுகம் தூக்கம்
இளமை முதுமை மரணம்.
அறிவியல் சுகங்கள்
அனைவருக்கும் கிட்டாது.
மழை அனைவருக்கும்.
காற்று அனைவருக்கும்.
பூமி அனைவருக்கும்.
ஆகாயம் அனைவருக்கும்.
நெருப்பு அனைவருக்கும்.
இயற்கை சீற்றங்கள் அனைவருக்கும்.
பசி தாகம் காமம் குரோதம்
ஆசை அனைவருக்கும்.
இவைகளை அனுபவிக்கும்
அனைத்து ஜீவராசிகள்
மரம் செடி கொடிகள்.
ஆனால் அறிவியல் சுகங்கள்
விண்வெளிப்பயணம்.
அதில் முதல்வகுப்பு.
ரயிலில் குளிர்சாதனப் பெட்டிகள்.
ஐந்து நட்சத்திர விடுதி சுகங்கள்
உயர் பதவிகள் அதிகாரங்கள்
உடல் வலிமை பலகீனங்கள்
அனைத்தும் கிடைக்க
வினைப்பயன்
ஆண்டவன் அருள்.
அமானுஷ்ய சக்தி.
நம்பித்தான் ஆகவேண்டும்.
இன்றைய எண்ணங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக