செவ்வாய், மார்ச் 15, 2016

மனக்கட்டுப்பாடு

மனக்கட்டுப்பாடு புலனடக்கமற்ற சமுதாய  வளர்ச்சி  பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும்
மன நிம்மதியற்ற வாழ்க்கை
தற்கொலைகள் .
ஒருகாலத்தில் ஏழ்மையால் தற்கொலை செய்தோர் அதிகம்.
இப்பொழுது வசதிபடைத்தோர்
ப்ரபலமாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். காரணம்
கள்ளத்தொடர்பு. விவாகரத்து.
காதல் தோல்வி .கடன் தொல்லை.
வங்கியில் சேமிப்பு அதிகம்.
அதை கடன் கொடுத்தால் தான் தக்கவைக்க முடியும்.
இந்த கொடுக்கல் வாங்கலில் ஏழைகள் மத்யதர மக்கள் நியாயமாக இருக்கிறார்கள் .
சட்டமும் உடனடியாக தண்டிக்கிறது.
ஆனால் பணம் படைத்தவர்கள்
சுலபமாக வணிகத்தில் நஷ்டம்
என்று    தப்பி விடுகிறார்கள் .
கார் கடனுக்கு வட்டி குறைவு.
கல்விக்கடன் கடினம்  வாங்குவது.
சாதிக்கப் பிறந்தவர்கள் ஜாதிக்காக பிறக்கவில்லை.
மூன்று வயதுகுழந்தையைக் கொல்லும் அளவுக்கு காமம்
மனிதநேயம் மாயமாகிறது.
நாங்கள் படிக்கும்போது நீதிபோதனை வகுப்பு .
இப்போ L.o.E. life oriented education .அதில் ஆசிரியர் வருவதில்லைநடுவில் வி போட்டு  லவ் என்று மாணவர்கள்   விளையாட்டு. தலைவர்கள்ஜாதி விளையாட்டு.
சுயநலம் மனிதநேயம் மறந்து .
சாதிக்காமல் ஜாதிக்காக.,
கள்ளக்காதலுக்காக
பெற்ற குழந்தையை விட்டு ஓடும்
தாய்./தந்தை. பற்றே அற்ற
இரக்கம்அற்ற காமம்.
தொன்று தொட்டு மஹாபாரதத்தில
இருந்து வரும் சமுதாயஅவலம்.
நமக்கு சமுதாய சிந்தனை மாற
புலனக்கம் தேவை.
பெண்களை கவர்வதும் படையெடுப்பதும் வீரம் .
காதலிப்பது ஆண்டவனுக்கும்
உண்டு  என்ற தவறான ஆன்மீக சப்பைக்கட்டுவேறு.
சமுதாயம் சீரழியும் காதல் .
மனிதன் மனக்கட்டுப்பாடற்ற மிருகமல்ல.
சிந்திப்பீர் .செயல்படுவீர்

கருத்துகள் இல்லை: