அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
தீப +ஆவளி என்பது தீபங்களின் வரிசை.
தீப ஒளி என்பது விளக்கு வெளிச்சம்.
தீபாவளி வடமொழி. தீப ஒளி -வடசொல் +தமிழ் சொல்.
பாரதத்தின் பண்பாட்டு ஒற்றுமைக்கு ,
மன எண்ணங்களின் ஒற்றுமைக்கு
இரண்டு மொழிகளும் இணைந்தே
வளம் பெற்றுள்ளன.
தமிழின் பக்தி இலக்கியம் ,வடமொழி பக்தி இலக்கியம் இரண்டுமே ஓருடல் ஈருயிர் போன்றது.
இந்த ஆன்மீக ஒற்றுமையின் ஓர்
பண்டிகை தீபாவளி /தீப ஒளி திரு நாள்.
இந்த நன்னாளில் மொழி ,இன ,ஜாதி ,மத வேற்றுமை மறந்து
ஒரே பாரதம் என்ற சிந்தனை வளர
இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஒளிமயமான பாரதம் ,
ஒவ்வொரு பாரதமக்களின் மனதில் ஒளிவீசட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக