நீயா நானா நிகழ்ச்சி. பெற்றோர் --மகள் .அதில் அதிகம் பேசியது இன்றைய பெண்கள்
அதிகம் அறிந்தவர்கள்.எதையும் எதிர்கொள்வார்கள்.காதல் திருமணம் ஆதரிப்பவர்கள்.
பெற்றோர்களும் வேறு வழி இன்றி ஏற்பவர்கள் அதில் மூவர்தான் பெற்றோர்கள் இந்த
காதலை எதிர்த்தவர்கள்.சமுதாயத்தின் பரந்த உள்ளம்.வளர்ந்த கல்வி. அதில்
ஒருமிகவும் பாதிக்கும் கருத்து பெண்களைப்பெற்ற தந்தைகள் அனைவருமே பயத்தில்
தான். வெளியில் சென்றமகள் பலாத்காரத்திற்கு ஆளாகாமல்
திரும்பிவரவேண்டும்.மகள்கள் பகுதியிலிருந்து அது நடக்கும்
அதில் எங்கள் உறுதி வலு தளர்ந்தால்.
ஆடைகள் எங்கள் விருப்பம்.
அரை குறை ஆடைகளிலும் எங்களைக்காக முடியும்.
மீறி நடந்தால் விதிப்பயன்.அதெல்லாம் சரி -
-இன்றைய செய்தி-
பெற்றோர் எதிர்த்ததால் காதலனுடன் சேர்ந்து அவர்களை கொடூரமாக கொன்று விட்டு காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த 16 வயது மகள்! -
இது சமுதாய வளர்ச்சி மாற்றமா.கல்வி வளர்ச்சியா?
சின்னத்திரை -பெரிய திரை மாற்றமா?
கணினி வளர்ச்சியா?
எதிர்கால சமுதாயம் சீரழிவை நோக்கியா/பேரழிவை நோக்கியா?
எல்லாம் நல்லொழுக்க பண்பாடற்ற கல்விமுறையின் வெளிப்பாடு.
படி .அதில் நீதி இல்லை.
ஒழுக்கம் இல்லை.
நன்கொடைக்கல்வி.
நன்னடத்தைகளை கொலை செய்யும் கல்வி முறை.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
இன்றைய போக்கு --முன் எரி தெய்வம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக