திங்கள், ஏப்ரல் 15, 2013

ஞானம் வரும் இது அறிவியல் உண்மை.




தூய மனத்துடன் 

தும்பிக்கையானை
  நாளும் துதித்து 
நம்பிக்கையுடன் 
துவங்கும் பணிகள் 
துரிதமாக  
துள்ளியமாக
தங்கு தடையின்றி
நினைத்தபடி 
நிறைவேறுமே.

சங்கடங்கள் தீர்ப்பான் 
சக்தி மைந்தன் ,
சங்கட ஹர விநாயகன்.
சகல சுகம் தருவான் 
சர்வ சித்தி விநாயகன்.
சகலமும் தருவான் 
கற்பக விநாயகன்.
கந்தனுக்கு 
மூத்தோன்.
சிக்கலைத் தீர்ப்பான் 
சிவனின் ஜேஷ்ட குமாரன் .
முக்திக்கும் சக்திக்கும்
 வித்தாவான் 
முக்குருணி விநாயகன்.
சக்திகள் நவநிதி தருவான் 
சக்திவினாயகன்.
காதலுக்கும் கரம் கொடுப்பான்
கார்த்திகை சகோதரன்.
தாய் தந்தையரே உலகம் என்று 
சிறாருக்கு வழிகாட்டி,
கலியுகத் தெய்வம் கந்தனை 
பழனியம் பதிக்கு அனுப்பி,
தென்னாட்டில் 
தமிழகத்தில் 
காக்கும் தெய்வமாக 
தண்டாயுத பாணியை 
முருகப்பெருமானை,
ஆறுமுகனை,
கந்தனை,கடம்பனை
அனுப்பி அனுக்ரகித்த
யானை முகத்தோனை,
எளிய பக்திக்கு 
எங்கும் வீற்றிருக்கும் 
எலி வாகனனை 
இருசெவி பிடித்து 
தோப்புக்கரணம் 
போட்டால் 
ஞானம் வரும் 
இது அறிவியல் உண்மை.














கருத்துகள் இல்லை: