மனிதனின் பேராசை தான் மனிதனை மிருகம் ஆக்குகிறது. அவன் மற்றவர்களுக்கு துரோகம் செய்கிறான்.மற்றவர்கள் சொத்தை அபகரிக்கிறான்.கொலை செய்கிறான்.பொய் பேசுகிறான்.குற்றங்களையும் ,குற்றவாளி களையும் மறைக்கிறான்.ஏமாற்றுகிறான். பாவங்கள் செய்கிறான். பொறாமைப் படுகிறான்.கோபப்படுகிறான். வெறுக்கிறான்.துன்புறுத்துகிறான்.கருமிஆகிறான் .அதனால் தான் புத்தர் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார். ஆசைப்படுபவனால் மனதை சஞ்சலப்படுத்த முடியுமே தவிர மனக்கட்டுப்பாடு என்பது இயலாத காரணம்.
பற்றற்ற வாழ்க்கை என்பது வேறு.தேசப்பற்று,இறைப்பற்று,மொழிப்பற்று. ஆசை,பேராசை வேறு.இந்த பற்றை த்தான் உலகப்பற்று.லௌகீகம் என்கின்றனர். உலகத்தில் தாமரை இல்லை தண்ணீர் போல் ஒட்டியும்,
ஒட்டாமல் இருக்கவேண்டும்.
மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.நடைமுறையில் மனிதர்கள் தன்மானம் இழப்பதை விரும்புவதில்லை. அப்பொழுது தான் வெறுப்பும் ,பகையும் அதிகமாகிறது. சிலருக்கு மற்றவர்களை அவமானப்படுத்தி மட்டம்
தட்டுவதில் எவ்வளவு ஆனந்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக