வியாழன், அக்டோபர் 25, 2012

ஊழல் பேசினால் உயிருக்கு ஆபத்து.


விடுதலைக்கு முன்.
அவனியல் அச்சமில்லை அச்சமில்லை,
இச் ஜகத்தில் உள்ளோரெல்லாம்
எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை;அச்சமில்லை;அச்சமென்பதில்லையே.(மஹாகவி பாரதி)
விடுதலைக்குப்பின்
அச்சம் உண்டு;அச்சமுண்டு;
அமைச்சரின் ஊழல் சொன்னால்;
அரவிந்த் கேஜறி. சொல் வாளுக்கு .
ஆளும் அமைச்சர் ஊழல் சொன்னால்
ஊருக்குத் திரும்ப மாட்டாய் .
ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில்;
வீர பத்திரர் ;ஹிமாலய முதல்வர்;
வெற்றிபெற்றபின் வெளியில் பதில்.
தோல்வி அடைந்தால்
ஒரு முறைப்பு.
பாவம் நிருபர்.
ஜனநாயக நாட்டில்
ஊழல் பேசினால் உயிருக்கு ஆபத்து.
வாழ்க ஜனநாயகம்.

கருத்துகள் இல்லை: