வியாழன், அக்டோபர் 25, 2012

வையகத்தின் இயக்கம்.



ஆயுதம்  ஒன்று நினைவுகள் அகற்ற;
வையகத்தில் இல்லை.
அப்படி ஒரு  ஆயுதம் ஒன்று உண்டாகின்
வையகம் இல்லை.
ஒரு பிரளயம் தான்.
சிலருக்கு
ஆண்டவனின்  நினைவு.
சிலருக்கு
பொருள் சேர்க்கும் நினைவு.
சிலருக்கு
உலகைக் காக்கும் நினைவு.
சிலருக்கு
இன்னல் தீர்க்கும் நினைவு.
சிலருக்கு
அல்லல் தீர்க்கும் நினைவு.
நினைவுகளும் கனவுகளும்
தான்
வையகத்தின்  இயக்கம்.


கருத்துகள் இல்லை: