திங்கள், மார்ச் 12, 2012

rajayokam.

உலகில் உண்மை என்பதே உன்னத நிலை அடைந்தாலும் ,பொய் என்பது பண பலத்தாலும் ,அதிகார பலத்தாலும்,ஆணவத்தாலும்,தன்னலத்தாலும், நட்பு ,விரோதம்,குரோதம் ,பாசம் ,நேசம் என்ற மாயையில் தலைவிரித்தாடுகிறது.
அதற்காக கையூட்டு,ஊழல்.சிபாரிசு,,ஜால்ரா ,சூழ்ச்சி,கொலை,கொள்ளை,கடத்தல்,என்ற செய்திகள் நாள்தோறும் பார்க்கிறோம்.என்ன செய்வது./?
இறைவன் இவ்வுலகில் இப்பாவிகளுக்காகவே நோய்,விபத்து,மரணம்,இயற்கையின் சீற்றம்,மழலைப்பேரின்மை,அகால மரணம்,,தோல்விகள்,அவமானங்கள்,பைத்தியம்,குருடு,செவிடு ,அங்க ஹீன அவஸ்த்தைகள்,கோடிக்கணக்கில் பணம் இருந்தும் தீராத நோய்கள் என 
நேரடியாக இன்றி மறைமுகமாக முரசரைந்துகொண்டிருக்கிறான்.

நமது முன்னோர்கள் இதை அவ்வப்பொழுது வேதம்.பகவத் கீதை,குரான் பைபிள் 

போன்றவைகள் மூலம்  பல முறை வலியுறித்தியும்,அன்றாட  இறைவணக்கம் 
மூலமும், உணர  வைத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் கலியுகத்தில் ஆன்மிகம்   என்பது கோயில் உண்டியலில்  பணம் போடுவதும் ,கொலைவெறி  பாடலுக்கு  முக்கியத்துவம்  கொடுப்பதாகவும்  உள்ளது .

இது இன்றைய  கல்யுகத்தில்  மட்டுமல்ல ,இராமாயண மகா பாரத காலத்திலும் 
இருந்துள்ளது.இல்லை என்றால் ராம-ராவணப்போர்,மகாபாரதப்போர் ஏன் வந்தது.கல்லால் அடித்ததும் ,சிலுவையில் அறிந்ததும் ஏன் நடந்தது.
ஆகையால் தான்  
முனிவர்களும் ,யோகிகளும்,சித்தர்களும்,துறைவிகளும்,சிங்கம்,புலி,சிறுத்தை,பாம்புகளும் வாழும் காடே மேல் என்று அங்கு சென்று வாழ்ந்தனர்,அதற்கு மனம் வேண்டுமல்லவா? முற்றிலும் துறக்கும் மனம் ...சித்தார்த்தர் போல்,மகா வீரர் போல்.
ஊரில் வாழும் ஆடம்பர ஆஷ்ராமவாசிகள் பட்டதற நிலையில் இல்லை.
ராஜ யோகம் என்று இதைத்தான் கூறுகின்றனர்.



கருத்துகள் இல்லை: