வெள்ளி, மார்ச் 02, 2012

kabeer eeradi dheiveeka uravu

நல்ல மனிதர்கள் ,உயர்ந்த மனிதர்கள் இந்த உலகில் உள்ள தீயவைகளை அகற்றி நல்ல குணங்களை மட்டும் ஏற்பர்.வித விதமான  மலரின் மணம் அறியும் வண்டு அதன் மதுவை உறிஞ்சுவதைப்போல் ,உயர்ந்த மனிதன் ஒவ்வொரு மனதிலும் இருக்கும் பகவானை அறிந்து கொள்ளுவான்.
औगुन को तो ना गहै,गुनही को लै बीन. घट घट  महंके   मधुप ज्यों ,परमातम लै चीन.


६.
அன்னப் பறவை  பாலும் தண்ணீரும் கலந்து வைத்தால்  பாலை மட்டும்  அருந்தும். நீரை விட்டு விடும்.அவ்வாறே இறைவனை இதயத்தில்  வைத்துள்ள  
இறையன்பன்  அந்த ஆன்மீக தத்துவத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு ,மற்ற
உலகியல் தீயவைகளை விட்டு விடுவான்
हंसा पय को काढी ले ,छीर नीर निर्वार.ऐसे गहै जो सार को,सो जन उतरे पार.
७.
छीर रूप सतनाम है, नीर रूप व्यवहार. हंस रूप कोई साध है,तत का छाननहार.

இறைவனின்   நாமம்  பால் போன்று தத்துவம் நிறைந்தது.உலகியல் விவகாரங்கள்  தண்ணீர் போன்று சார மற்றது.இவ்வாறே அன்னம் போன்று
சாது -மகான்கள் சாரம்- சாரமற்ற தன்மை அறிந்து  இறைவனையே சரணடைகின்றனர்.
8 .
समदृष्टि  सतगुरु  किया,दीया अविचल ज्ञान.जहँ देखौ तहँ एक ही ,दूजा नाहीं आन.

எனக்கு குருவானவர்  அசையாத திட மான அறிவை தயக்கமில்லா அறிவை 
கொடுத்துள்ளார். சம நோக்கைக் கொடுத்துள்ளார்.ஆகையால் நான் எங்கு
நோக்கினும் அந்த ஒரே தத்துவமான இறைவனை பார்க்கிறேன்.வேறு ஏதும்
எனக்கு எண்ணங்கள் (உலகவியல்)ஏற்படவில்லை.
௯.
சமநோக்கு என்பது அமைதி ,எல்லா மதங்களையும் சமமாக பாவிப்பது.
எல்லா பிராணிகளின் ஆன்மாக்களையும் ஒன்றாகக் கருதுவது.சமமாக நோக்குவது.
समदृष्टि  तब जानिये,सीतल समता होय.सब जीवन की आत्मा ,लखै एक सी सोय.


 







r

கருத்துகள் இல்லை: