१.
கபீர் தாசர் ஆத்மா ஞானம் பற்றி கூறும் போது அது விளக்கமளிக்க முடியாத
ஒரு தெய்வீக உணர்வு என்கிறார்.
ஒரு வாய் பேச முடியாத ஊமை வெல்லம் சாப்பிட்ட இனிமையை உணர்வது போல் தான் நாம் உணர முடியுமே தவிர அதை கூறி விளக்க முடியாது.
आतम अनुभव ज्ञान की,जो कोई पूछे बात. सो गूंगा गुड खाइकै,कहै कौन मुख स्वाद.
२.
ஊமையின் சங்கேத மொழியை ஒரு ஊமையால் தான் புரிந்து கொள்ள முடியும்.அவ்வாறே ஆன்ம ஞானத்தின் முழு ஆனந்த உணர்வை ஒரு ஆன்ம
ஞானியால் தான் உணரமுடியும்.
ज्यों गूंगे के सैन को ,गूंगा ही पहचान.
त्यों ज्ञानी के सुक्ख को ज्ञानी होय सो जान.
३.
कागद लिखे सो कागदी,की ब्योहारी जीव.
आतम दृष्टी कहां लिखै,जित देखी तित पीव.
நாம் அறிவு என்று காகிதத்தில் எழுதும் அறிவு ulakil nadai murai அறிவு.
aanaal ullunarvin paarvaiyaal கிடைத்த ஞானம் தெய்வீகமானது .அந்த ஞானம் கிடைத்த பின் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் இறைவனே தென் படுகிறான் .
4.
ஆத்மாவின் உள் நோக்கால் கிடைக்கும் ஆன்ம உணர்வு ஈஸ்வரானுபூதி .அது பார்த்து உணரும் அறிவு.ஆத்மா உணர்வு ஏற்பட்ட பின் ஜீவாத்மா பரமாத்மா ஈரரக் கலந்து ஒன்றறக் கலந்து விடுகிறது..அந்த உயர்ந்த நிலையில், உலகப் பற்று ஏற்படுத்தும் பஞ்ச
தத்துவங்களும் வறண்டுவிடும்
लिखी-लिखी की है नहीं, देखा-देखी बात ;दुल्हदुल्हीं मिलगये,फीकी पड़ी बरात.
५.
भरो होय सो रीती,रीतो होय भराय; रीतो भरो न पाईये,अनुभव सोए कहाय;
அறிவு நிறைந்தவன் ஆன்ம ஞானம் பெற்ற பின் முழுமையான ஞானம் பெற்றும் வெறுமையை உணர்கிறான்.அறியாமையால் நிறைந்தவன் ஆன்ம ஞானம் பெற்று முழுமையான ஞானம் பெற்ற அனுபவம் பெறுகிறான்.உண்மையான உணர்வு பரிபூர்ண ஞான நிலை.அந்நிலையில்
வெறுமையும் முழுமையும் சமமாகிறது.
ஆணவத்தில் மூழ்கும் அறிவாளி வெறுமை அடைகிறான் பணிவின் காரணமாக வெறுமை உணர்பவன் முழுமை பெற்ற ஞானி ஆகிறான்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக