புதன், ஜனவரி 04, 2012

torch vender Hindi kathai in tamil

டார்ச் விற்பவன்
(சாமியார்கள் போலிகள் உருவாகும் )கதை

ஹரி ஷங்கர் பிரசாத் ஹிந்தியில் சிரிக்க சிந்திக்க கதை எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர்.அவரின் டார்ச் பேச்னே வாலா  என்ற கதையின் சுருக்கம்.

தெருவில் டார்ச் விற்பவன் இரண்டு மாதத்திற்குப்பின் தாடியுடன் தென்பட்டான்.
எழுத்தாளர் அவனிடம்  இரண்டுமாதமாக எங்கு சென்றிருந்தாய்/?தாடி ஏன் என வினவினார்.
அவன் தன் தாடி வளர்த்த கதையைப்பற்றி கூறினான்.:--
அவனும் அவன் நண்பனும் பணம் சம்பாதிக்க ஏதேனும் ஒன்று செய்யவேண்டும் என்று முடிவெடுத்தனர்.ஆனால் கூட்டு கூடாது என்றும் இருவரும் தனித்தனியாக   செல்வது என்றும் ஐந்தாண்டிற்க்குப்பின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதென்றும் முடிவெடுத்தனர் அன்றிலிருந்து இவன் இருள் பயத்தைப்போக்கும் டார்ச் லைட் என்று விளக்கு வியாபாரம் செய்துவந்தானம்.அவன் தன் விளக்கு விற்பனைக்காக விளம்பரம் செய்வான்:-எங்கும் இருள் சூழ்ந்துள்ளது.சிங்கமும் சிறுத்தையும் நாலாபக்கங்களிலும் சுற்றி வருகின்றன.விஷ ஜந்துக்கள் ,பாம்புகள் தரையில் ஊர்ந்து செல்கின்றன.இரவு இருள் சூழ்ந்து இருக்கிறது.கால்கள் முள்ளில் குத்தப்படும் .பாம்பு கொத்தி உயிருக்கே அபாயம் ஏற்படும்.இருள்  வீட்டுக்குள்ளும் சூழ்ந்து இருக்கும்.
இருளில் ஒளி பெற  எனது "சூரியன்"பிராண்ட் கை விளக்கு வாங்குங்கள் என்று
விளக்குகள் விற்றுவந்தானாம்.
நண்பனிடம் முடிவு செய்த படி ஐந்தாண்டுகாலம் முடிந்து விட்டது.இவன் நண்பனை சந்திக்க அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் நண்பனைக் காணவில்லை.அங்கு மக்கள் கூட்டம்.ஒலிபெருக்கி அமைத்த அலங்கரிக்கப்பட்ட மேடை.அங்கு திரைப்படங்களுக்கு ஆலோசனை கூறும் ஆசிகள் கூறும் ஒரு மகான் வருகை தரப்போகிறார் என்று மக்கள் கூறினார்.
மிக உயர்ந்த பட்டாடைகள் அணிந்த தாடி வைத்த,முதுகில் முடிகள் அலைபாயும் ஒரும் சாது வந்தார். அவர் வந்த மகிழுந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த விலை உயர்ந்த மகிழுந்து.
சாது தன் அருளுரை  தொடங்கினார்:-
நான் இன்று மனிதர்களை இருள் சூழ்ந்த சூழலில் பார்க்கிறேன்.இந்த யுகம் இருள் சூழ்ந்த யுகம்.மனிதன் இருளில் வழி   தவறுகிறான்.அவன் ஆத்மா இருள் சூழ்ந்துள்ளது.அவன் உள் மனக்கண்கள் ஒளி இழந்துள்ளன.மனிதனின் ஆத்மா பயத்தாலும் மனவேதனையினாலும்  பீடிக்கப்பட்டுள்ளது.
ஆண்களும் பெண்களும் பக்தி சிரத்தையுடன் அவரின் அருளுரை கேட்டு 
மெய்மறந்தனர்.
மேலும் கூறினார்:இருள் உள்ள இடத்தில் ஒளி இருக்கும் இருளில் ஒளிக்கதிர்கள் இருக்கின்றன.அதை மனத்திற்குள் உனக்குள் தேடு.மனத்திற்குள் இருக்கும் ஒளியை எழுப்பு.நான் எல்லோரின் அந்த 
மன ஒளி விழிப்படையச்செய்ய அழைக்கிறேன். அணையா ஒளிவிளக்கு ஏற்ற 
எனது ஆஷ்ரமம் "சாதனா மந்திரத்திற்கு வாருங்கள்.
அருளுரை கூட்டம் முடிந்தது.
அந்த சாதுவை  கைவிளக்கு விற்றவனால்    அடையாளம்  காண  முடியவில்லை .ஆனால்  
அவர் அவனை   அடையாளம் கண்டு  அழைத்தார். அவர்தான் இந்த வியாபாரியின் உயிர் நண்பன்.இவனை தன் ஆடம்பர மாளிகைக்கு அழைத்துச்சென்றார். அங்கு இரண்டு மாதம் கழித்து இவன் தாடி வளர்த்து மக்களுக்கு டார்ச் லைட்டுக்குப் பதிலாக  ஆன்ம ஒளி தரும் புதிய  அதே டார்ச் தான் விற்பனை.ஆனால் கம்பெனி சூரியன் பிரண்ட் டார்ச் விளக்கு கிடையாது.
ஆன்ம ஒளி தரும் புதிய கம்பெனி .அது ஒரு கதையல்ல.அது சூக்ஷ்ம ஞானம் தரும் மன இருள் அகற்றும்  பல கோடி லாபம் தரும் "சாதனா மந்திரம்."
இவன் கம்பெனி மாறி விட்டது.
இன்றைய போலி சாதுக்கள் ,ஆனந்தம் மக்களுக்கு புரிய வைக்கும் கதை.
சாமியார்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.





கருத்துகள் இல்லை: