இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இந்தியா முழுவதும் ,
கொண்டாடும் 
இனிய திருவிழா.
நகாசுரனை  வதம் செய்த நன்னாள்.
கிருஷ்ணன்  அசுரனை அழிக்க  ,
சக்தியின்  துணை தேவை ,
என  சத்யபாமா உறுதுணையுடன் 
அசுர சக்தியை சம்காரம் செய்த நாள்.
தீமை இருள் அகல,
நல்   ஒளி  பெருக,
அலைமகள் அருள் பெற,
ஆனந்தமாக  கொண்டாடும் 
ஆனந்தத் திருநாள்.
இந்நன்னாளில் 
வாணிகம் வளர்கிறது.
ஒளி ,ஒலி  கலந்த திருநாளாகிறது.
மகிழ்ச்சி பொங்குகிறது.
மன நிறைவு பெறுகிறது.
இந்த இனிய நாளில்,
அனைவரின் 
ஆற்றல்பெருக,
ஆயுள் ஆரோக்கியம் ஆனந்தம் பெருக,
அலைமகள்,கலைமகள் ,மலைமகள்,
மூவரும் துணை நிற்க,
அனைவருக்கும் 
வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக