புதன், நவம்பர் 14, 2012

என் அம்மாவின் நினைவலைகள்--பகுதி-1.


என் அம்மாவின் நினைவலைகள்--பகுதி-1.

என் அம்மா 
உழைப்பு,
ஊதியம்  இல்லா உழைப்பு.
13 வயதில் திருமணம்.
அம்மா சொல்வது ஒரு நகைச்சுவையாக இருந்தாலும்,
அவர் ஆழ்மனம் எப்படிப்பட்டது;
அவருக்கு எப்படி பொறுமை;
அவரது திறமை எப்படி புகுந்தவீட்டில்,
தூசி துருபிடித்தது என்பதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அவரது திருமணம் நிச்சயிக்கப்படவில்லை.
பெற்றோர்கள் கலந்து பேசவில்லை. 
அது காதல் திருமணமும் அல்ல.
ஆச்சரியமாக உள்ளதா?
அதுதான் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணமோ?
என் கொள்ளுப்பாட்டி பழனி சென்றுள்ளார்.
அங்கு சொந்தக்காரர்வீட்டிற்கு சென்றுள்ளார்.
என் அத்தைக்கு திருமணம்.
என் பாட்டி பேத்தியைப்பற்றி கூற,
என் தாத்தா என் பெண் கல்யாணத்துடன் திருமணம் செய்யலாம்.
பெண்ணை அழைத்துவாருங்கள் என்றாராம்.
பெண் பார்க்கும் சம்பிரதாயம் இல்லை.
பெற்றோர்களும் சந்திக்கவில்லை.
நேரடியாக திருமணமண்டபம்.
பழனியிலிருந்து என் கொள்ளுப்பாட்டி காமுப்பாட்டி என்றால்
 வத்தலக்குண்டில் எல்லோருக்கும் தெரியும். நடந்தே சென்றுள்ளார்.
அவசரக்கல்யாணம்.

திருமண அழைப்பிதல் அடிக்கவில்லை. 
உற்றார்-உறவினர்களுக்கு தகவல்மட்டும்.
அப்பொழுது தொலை பேசி,கைபேசி,கணினினி, எதுவும் கிடையாதே,
போக்குவரத்து  சாதனங்களும் இல்லை. 

 நேரடியாக அனைவரும்  திருமணமண்டபம் சென்றுள்ளனர்.
அங்கு இரு    மணமேடை . இரண்டிலும் மாப்பிள்ளைகள்.
அவசர அவசரமாக அலங்கரித்து,
மண  மேடைக்கு பெண்ணை அனுப்பினால்.
என் அம்மா, எதுவும் புரியாமல்,
நாத்தனார் மாப்பிள்ளை அருகில் உட்கார,
என் மாமா பார்த்த பெண் வேறு,அமர்ந்த பெண் வேறு,என,
கோபமாக எழுந்திருக்க,
அதற்குள் சமாதானம் செய்து ,
எங்கம்மாவை,தரதர என இழுத்து ,,என் அப்பா அருகில் 
உட்காரவைத்துள்ளனர். இதற்குள் என் தாய் மாமாவிற்கு ஒரு தவிப்பு.
கோத்திரம் கூட கேட்கவில்லையே என.
அதை எங்கம்மா தமாசாகக் கூறுவார்--
கோத்திரம் ஒன்றே இருந்தால், "ஓடிவா"- என்று மாமா கூறினாராம்.
அம்மா கௌண்டிண்யம்.
நாங்க கௌசிகம்.
மாமா ,"கௌ" என்றதும் எழுந்தாராம்.
அம்மா  தயாராக .
ஓட்டப்பந்தய வீராங்கனைபோல் தயாரானாராம்.
"ண்டிண்யம்  "என்றதும்,மாமா அமர,அம்மாவும் அமர்ந்தாராம்.
அம்மா கருப்பு.அப்பா சிவப்பு.
இதுவேறு பிரச்சனை.
அப்படி இப்படி திருமணம் முடிந்தது
 பின்னர் தான் வயது வித்தியாசம்,ஜாதகம் 
எல்லாம் பார்த்துள்ளனர். கிட்டத்தட்ட 15-16 வயது வித்தியாசம்.
ஏக நக்ஷத்திரம்.
திருமணம் ஒருவியப்பாக முடிந்தது,
அம்மா தன வேதனைகளை மறந்தோ,மறைத்தோ,
தமாஷாக தன் திருமணம் நடந்ததைக் கூறுவார்.
அவர் மன தைரியம், அந்த 12-13 வயது. அவர் பட்ட பாடு.
தொடரும்.





1 கருத்து:

Ranjani Narayanan சொன்னது…

உங்கள் அம்மாவின் நினைவு மனதை நெகிழ வைக்கிறது. ஆறு பகுதிகளும் படித்தேன்.

அந்த காலத்தில் பல பெண்களின் வாழ்க்கை போராட்டமாகத்தான் இருந்திருக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலும் அடுத்த பகுதிக்கு- முந்தின பகுதிகளுக்கு இணைப்பு கொடுங்கள்.

ஆறாவது பகுதியில் முந்தைய ஐந்து பகுதிகளுக்கும் இணைப்பு கொடுங்கள்.