வெள்ளி, நவம்பர் 09, 2012

தமிழக ஹிந்தி பிரச்சாரகர்கள் பாவப்பட்டவர்கள்.



ஹிந்தி  பிரசாரம்  தேசத்தந்தை  மோகன்தாஸ் கரம்சந்த்  காந்திஜியின் ஆக்கப்பணிகளில் ஒன்று. 1918ஆம் ஆண்டு தென்னகத்தில் ஹிந்தி பிரசார சபை ,சென்னையில் ,,ஆரம்பிக்கப்பட்டது. காந்திஜியின் புதல்வர் தேவதாஸ் முதல் பிரசாரகர். தந்தை பெரியார்  இல்லத்தில் ஈரோட்டில் ஹிந்தி வகுப்புகள் நடந்தன .
1965=67இல்  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் .பின்னர் தமிழகத்தில் திராவிட முன்னேற்றகழக ஆட்சி.1968முதல் இருமொழி திட்டம்.தாய் மொழி.ஆங்கிலம்.
இதனால் தமிழே படிக்காமல் தமிழ் நாட்டில்மட்டும் பட்டம் வாங்க முடியும்.மற்றமாநிலங்களில் மாநில மொழி அறிவில்லாமல் உயர்நிலைப்பள்ளி  முடிக்கமுடியாது. எதோ தமிழ் பெயர் சொல்லி ஆட்சி பிடித்தோர் தமிழுக்கு செய்த தொண்டு.
   இந்த தமிழகத்தில்  ஹிந்தி பிரச்சாரம் செய்ய பயிற்சி பெற்ற  நிரந்தர பிரச்சாரகர்கள் கிடையாது.மாநில அரசு எதிர்ப்புடன் இன்றும் ஹிந்தி தேர்வு எழுதுவோர்,தேர்வு எழுதாமல் ஹிந்தி படிப்போர்   லக்ஷக்கணக்கில்.

அந்த புனித பிரசாரத்திற்கு  அரும்பாடு படும் பிரச்சாரகர்களுக்கு  தகுந்த ஊக்கம் சபை தருவதில்லை.அதன் நோக்கம் பொதுமக்களிடம் ஹிந்திப்ரச்சரம் செய்வதை விட  மேல்நிலைப்பள்ளி நடத்துவது,ஆசிரியர் பள்ளி நடத்துவது என்று மாறிவிட்டது.சபையில் தேர்தல் நடக்கும்.நீதிமன்றத்தில் வழக்கும் ந டக்கும்.
ஆனால்,அதிகமான தகுந்த ப்ரச்சரகர்களை  உயர்ந்த ஊ தியத்தில்  செய்பவர்கள் நியமிக்க முயற்சி நடக்காது. 12 வயதில் பி.எ.சமமான பட்டம் வழங்கப்படும்.
பிரச்சாரம்  செய்பவர்கள் தியாகிகளாக  இருக்கவேண்டும். மத்திய அரசில்  வேலை இல்லாத இந்தி அலுவலர்களுக்கு  கோடிக்கணக்கில் பணம். வீ ணாகிறது.
67 ஆண்டு சுதந்திரமாகியும்  ஹிந்திக்காக  பலகோடி செலவழித்தாலும்  தமிழக ஹிந்தி பிரச்சாரகர்கள்  பாவப்பட்டவர்கள்.

கருத்துகள் இல்லை: