வெள்ளி, அக்டோபர் 26, 2012

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. வையகம் ஒருநாள் உணரும்;உணரும்; வையகம் ஒருநாள் உணரும்;உணரும்;

 திரை  கடல்  ஓடியும் திரவியம் தேடு.

நம் நாட்டு மக்கள்  வணிகம்,வேலைவாய்ப்பு என 
வெளிநாடுகளுக்கு   செல்கின்றனர்.
அப்பொழுது   அவர்கள் செய்யும் தியாகம்,
சிந்தித்து    பலவகையில் 
நாட்டு மக்களும் ,உற்றாரும் ,நண்பர்களும் 
உதவ வேண்டும்.
ஆனால்  நம் நாட்டின் மன நிலை;
வெளிநாட்டுப்பணம்   முடிந்த அளவு  கர .
என்று பிடுங்கும் கூட்டம்.
அந்நிய நாட்டில்  அலுவல் புரியும் .
அந்த இளைஞர்கள்  வந்தால் 
என்னகொண்டுவந்தார்கள் 
என்று  பார்க்கும் கூட்டம்.
செட்டிநாட்டு அழகு கட்டிடங்கள் பார்க்கிறோம்.
ஆனால் 
கோடிக்கணக்கில் சம்பாத்திதவர்கள் 
எத்தனை ஆண்டு குடும்பத்துடன் 
வாழ்ந்தார்கள் பாவம்.
ஆஸ்திகள் சேர்க்க அவர்கள்  செய்த தியாகம் 
நினைப்பவர்கள் யார்.???
மொழி மறந்து ,இனம் மறந்து,உற்றார் 
உறவினர்மறந்து செல்லவில்லை.
செட்டிமகன் ,கெட்டிமகனாக வாழ்ந்து,
செட்டி தமிழ் என்று தமிழ் வளர்த்த பெருமை.
வையகம் உணர்ந்து போற்றும்.

தமிழ் வாழ் இலங்கைத் தமிழர்கள் 
தமிழ் மொழிக்கு ஆற்றும் தொண்டு,
தமிழ் தமிழ் என்று,
ஆட்சியைப் பிடித்தோர்,
இந்தி எதிர்ப்பு என இளைஞர்களை 
பலியாக்கி 
சிற்றூரிலும் ,பேரூரிலும் 
மம்மி,டாடி , ட்வின்கில் ,ட்வின்க்கில்,
என்று பாட வைத்த பெருமை.
தன்  செல்வங்களை மத்திய அமைச்சராக்கி,
ஹிந்தி பேச வைத்த பெருமை.
அவ்வையின்  அறம்  செய விரும்பு 
பேசினால் ஊழல்கள் எடுபடாது 
என்று 
ரெயின் ரெயின் கோ எவே 
என மழலை அமுதம் 
கேட்கவைத்த பெருமை,
ஏ ,பி,சி,டி, என்ற இருபத்தாறு எழுத்தும்,
ஐந்து ஆங்கில " மீனைப்பிடி,தண்ணீரில் விடு"'
போன்ற ஐந்து பாடல் படிக்க 
குறைந்த பக்ஷம் பத்தாயிரம் ரூபாய்.
தப்பித்தவறி தமிழ் பேசும் 
மழலைகளுக்கு 
தர்ம அடி.அல்லது மிரட்டல்.
அரசியல் சட்டம் ஆங்கிலம் வளர்க்க அல்ல.
நாட்டு மொழிகள் வளர்க்க.
அதை மறைத்து 

ஹிந்தி படித்தல் தமிழ் அழித்தல்  என்ற மாயை.

இந்திய நாட்டில்,
தமிழ் நாடு,பாண்டிச்சேரி  பத்து கோடி மக்கள்.
மற்ற மூன்று மாநிலத்தில் 
26 கோடி மக்கள்.
அவர்கள் ஏற்ற மொழித்திட்டம்.
ஆங்கிலமின்றி  அரசு வேலை என்றால் 
எழுத்தர் வேலை கூட கிடையாது.
ஆங்கிலம்  வளர்க்க 
விடுதலை ஆன 67 ஆண்டுகள்,
நாம்பாடு பட்டிருக்கிறோம்.
தமிழாசிரியர் ஒன்றே தமிழ் வாய்ப்பு.
தேவாரம்பாடு என அரசு வழிகாட்டி.
மண்டபங்களும்,சிலைகளும் கட்டிய  கோடிகள் 
ஆங்கில புத்தகங்கள் மொழிபெயர்த்திருந்தால்.
அலுவலக  விண்ணப்பங்கள் தமிழில் அடித்திருந்தால் 
நாட்டு மொழி வளர்ந்திருக்கும்.
மேடைப்பேச்சில் தமில்வலர்த்து ,(தமிழ் வளர்த்து)
ஆங்கிலம் கலந்த தமிழ் பேசி 
தமிழ்  வருமானத்திற்கு வழிவகுக்காது,
என்ற சூழல் உருவாக்கி 
அமைதி காணும் அரசியல் தலைவர்கள்,
வையகம் ஒருநாள் உணரும்;உணரும்;




ய்தி »தமிழ்நாடு
அரசு பள்ளிகளில் ஆய்வு தமிழில் தடுமாறும் 9ம் வகுப்பு மாணவர்கள்

Advertisement

Advertisement
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012,23:59 IST
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே
ஒன்பதாம் வகுப்பில், முழுமையாக தமிழ் வாசிக்க, எழுத தெரியாத மாணவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககம், தமிழகத்தில், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புக்கான கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், 9ம் வகுப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிக அளவில் இருப்பதால், அதில் இருக்கும் சிக்கல்களை களைய, "அச்சீவ்மென்ட் டெஸ்ட்' என்ற சாதனை கண்டறியும் சோதனை, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டது.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள, 9ம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் தாய்மொழியான தமிழை முழுமையாக வாசிப்பதிலும், எழுதுவதிலும், திறன் இருப்பது கண்டறியப்பட்டது. எந்த அளவுக்கு மாணவர்களின் கற்றல் பயன் அவர்களிடம் சேர்ந்து, அதனால் திறன் பெற்றிருக்கின்றனர் என்பதை கண்டறியும் வகையிலும் வினாத்தாள் அமைக்கப்பட்டது. இதைக் "கற்றல் அடைவு தேர்வு' என, அழைக்கின்றனர்.இச் சோதனைகளில், 20 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழை முழுமையாக வாசிக்கவும், எழுதவும் தெரியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த, "கற்றல் அடைவு தேர்வு'களை நடத்தி, தமிழை முழுமையாக எழுதவும், படிக்கவும் முடியாத மாணவர்களை கண்டறியும் பணி, முழு வீச்சாக நடந்து வருகிறது.
தமிழ் மொழி முழுமையாக தெரிந்தால் மட்டுமே, தமிழ்வழி கல்வியில் படிக்கும் மற்ற பாடங்களையும், பிழையின்றி படிக்க முடியும் என்பதால், தமிழ் மொழியை முழுமையாக கற்றுத்தர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் கண்டறியப்படும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம், பள்ளி நேரம் முடிந்த பின்பும், சனிக்கிழமை களிலும், நவீன முறைகளில் தமிழ் மொழி எழுத்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை: