ஞாயிறு, அக்டோபர் 28, 2012

நேரடி நாம ஜபம். பாபங்களில், துன்பங்களில் இருந்து விடுதலை



இறைவன்  இருக்கிறான்.

அங்கும் இங்கும் எங்கும் இருக்கும் இறைவன்.

தூணிலும் இருப்பான் ,துரும்பிலும் இருப்பான் .

இறைவனை உணரா ஜன்மம் 
உலகில் இல்லை; இல்லை ;இல்லவே இல்லை.
உண்மை அறியாதவர்களுக்கு 
நேரடி உதாரணம்.
கவியரசர்  கண்ணதாசன்.
அவரது அர்த்தமுள்ள இந்து மதம்.
கலைஞர்  குடும்பம் காலஹஸ்தி  பூஜை.
முச்சந்தியில் ,நாற்சந்தியில் 
இல்லை ;இல்லை;கடவுளே இல்லை என்று 
எழுதி சிலைகள் வைத்தாலும்,
பழனி கோயிலின் வருமானம்.
பிரார்த்தனை செய்பவர்களுக்கு 
தானம் தர்மம் செய்பவர்களுக்கு 
சத்தியம் பேசுபவர்களுக்கு,
நிம்மதி!நிம்மதி!நிம்மதி!
ஆழ்  மன தியானம் ,
நமது தவறுகள் உணர்ந்து மீண்டும் 
தவறு செய்யா உறுதி பூண்டு 
செய்யும் தியானம் 
அதில் உணரும் தெய்வீகம்.
துன்பங்களிலிருந்து விடுதலை.
ஆனால் 
நாம்நமது கடமைகளை 
உண்மையாக செய்யவேண்டும்.
கடவுள்  எப்படியும்  எவ்வுருவிலும் காப்பார்.

அருணகிரியார்  வாழ்க்கை  ஓர் உதாரணம்;
திருப்புகழ்   பாடிய பக்தர்.
பக்தரானதும் அவரது வாழ்க்கைப் புனிதமடைந்தது.
வால்மீகி  கொலை,கொள்ளையில் ஈடுபட்ட பாதகர்.
பக்தர் ஆனதும் அமர காவியம்.
ஆனால் 
கடவுளிடம் நேரடித் தொடர்பு வேண்டும்.
முகவர்கள் ,குருமார்கள் வேண்டும்.
ஆனால் ,
கலி யுகத்தில் போலிகள் அதிகம்.
லௌகீக ஆசைகள் 
ஆண்டவனின் முகவர்களை 
வழிமாற்றம் செய்யும்.
பக்தர்களின் மனதிலும் 
மாயை,சாத்தான் குடி கொள்ளும்.
பல வகைகளில் ஆண்டவனின் 
மெய் அடியார்கள் உணர்த்தினாலும் 
உணராத மக்களுக்கு 
உணர வைக்க பகுத்தறிவுப் பாசறை 
 தந்தை பெரியார் ஈ.வே.ரா.
கலைஞரின் வசனம் 
நான் கோயில்களை வெறுக்கவில்லை.
போலி சாமியார்கள்,பூசாரிகள் 
இறைவன் பெயரால் அநியாயம் 
செய்யும் கயவர்களை,காமாந்தகர்களை  வெறுக்கிறேன்.
 தெய்வம்  இருக்கிறான்.
ஆலயங்கள் அதிகம்..
நாங்கள் கடவுளை நம்புகிறோம்.
அதற்கு கலி யுகத்தில் 
ஒரு முகவர் வேண்டாம்.
ஒரு முனிவர் சொன்ன 'ராம்"
முருகா,சிவா, என்ற நாம ஜபம்,
இறைத் தூதர் நபி சொன்ன "அல்லா"
பாபங்கள் சுமந்து முக்தி அளிக்கும் "ஏசு"
நேரடி நாம ஜபம் .
பாபங்களில்,துன்பங்களில் 
இருந்து விடுதலை.
ஆழ்  மன தியானம்.
அதுவே சாந்தி.
ஓம்!ஓம்!ஓம்!
சாந்தி;சாந்தி;சாந்தி;






கருத்துகள் இல்லை: