ஒற்றுமையாக இருப்போம்.
தனி மரம் தோப்பாகாது.
ஊரு இரண்டு பட்டால் கூ த்தாடிக்கு கொண்டாட்டம்.
கூட்டுறவே நாட்டு உயர்வு.
சமத்துவம் சஹோதரத்துவம்
ஊரு கூடி தேர் இழுப்போம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஒற்றுமையே உயர்வு.
தனி மரம் தோப்பாகாது.
ஊரு இரண்டு பட்டால் கூ த்தாடிக்கு கொண்டாட்டம்.
கூட்டுறவே நாட்டு உயர்வு.
சமத்துவம் சஹோதரத்துவம்
ஊரு கூடி தேர் இழுப்போம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஒற்றுமையே உயர்வு.
ஒற்றுமைக்கான பழமொழிகள் ,
சிறுகதைகள்,காளைமாடுகளும் சிங்கமும் நரியும் கதை
,கட்டு குச்சிகள் உடைக்கமுடியாது.ஒற்றைக்குச்சி உடைக்க முடியும் ..என்று ஒற்றுமைக்கு எவ்வளவோ கதைகளும் ,பழமொழிகளும் இருந்தாலும்
,வேற்றுமைகள் தான் அதிகம் இயற்கையில்.
அந்தவேற்றுமைகள் ஒன்றுபட்டால் தூய ஒளி .
பிரிந்தால் எழுவண்ண வானவில்.
வேற்றுமையில் ஒற்றுமை ஒரே வண்ணம்.
பலவண்ண பூக்கள் மலரும் பூங்கா அழகு.
ஆனால் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால் அழகல்ல.
நமது நாட்டில் இயற்கை வேற்றுமைகள் அதிகம்.
மொழிகளில் வேற்றுமை;சீதோஷ்ண நிலைகேற்றவாறு உடைகளில்வேற்றுமை.
பாரதநாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையாக திகழ்வது எண்ணங்கள்.
அந்த எண்ணங்களின் ஒற்றுமைக்கு காரணம் ஆன்மிகம்.
அந்த ஆன்மீகத்திலும் வேற்றுமை.அந்த
ஆன்மீகவேற்றுமையிலும்
ஒற்றுமை.
இறைவன் ஒருவனே என்பதற்கு கீதையில் விஸ்வரூபம்.
அனைத்தும் நானே . கீதோபதேசம்.
இந்த ஆன்மிகம் துண்டுபட்டு சனாதனதர்மம் அல்லல் படக்காரணம்
சுயநலமான பக்தி.,
அதற்கு ஞானம் கொடுத்த இறைவன்
அவ்வப்பொழுது இறைவன் ஒருவனே என்று எடுத்துரைக்க
மகான்களைப் படைக்கிறான்.
மகான்கள் மனித சேவைக்கு பல நல்வழி காட்டுகின்றனர்.
பாரத தேச ஆன்மிகம் எந்த மதத்தையும் தாக்கவில்லை.
மனிதர்களுக்குள் அன்பு ,பரோபகாரம் ,மனிதசேவை ,
துறவுநிலை,அஹிம்சை ,சரணாகதி அடைந்தவர்களைக் காத்தல் என்ற
உயரியசிந்தனைகளை உலகுக்கு அளித்து
ஒப்பில்லா பாரதமாக ஆன்மிகம் உலகுக்கு வழிகாட்டுகிறது.
ஷீரடி சாய் பஜனையில் பாடல் அல்லா சாய்,இயேசு சாய் ,என்று வருகிறது.
மஹாத்மா மோகன்தாஸ்கரம் சந்த் காந்தி அவர்களும்
மத ஒற்றுமைப்பாடலைப் பாடினார்.
சுவாமி விவேகானந்தர் உலகளவில் அனைவரையும்
சகோதர,சகோதரிகள் என்று விளித்து
பாரத நாட்டை உலகில் ஒளிரச்செய்தார்.
வசுதைவ்வ குடும்பகம்
உலகமே ஒருகுடும்பம் ,வையகம் வாழ்க
என்பதை உணர்த்துவது பாரதம்.
பாரத நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை இருப்பதுபோல்
சனாதனதர்மத்திலும் வேற்றுமையை ஒன்றுபடுத்தும்
உயரிய சஹிப்புத்தன்மை உள்ளது.
கடவுள் இல்லை என்று முச்சந்தியில் கல்வெட்டில் எழுதி
வைத்தாலும் அவர் தொண்டர்கள் வேள்வி யாகம் செய்யும்
ஆன்மீக மேம்பாடு தான் ஹிந்து தர்மம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக