திங்கள், அக்டோபர் 22, 2012

.இயற்கையின் நியதி ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

இயற்கையின் நியதி  ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

அகவை   கூடுகிறது.
ஆற்றல் குறைகிறது.
அன்பான குழந்தைகள்
அழகான பேரன் ,பேத்திகள்,
மகிழ்ச்சிக்கு  குறைவில்லை.
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் .
இருப்பினும் மூப்பு,
தள்ளாமை,
இயலாமை.
அதனால் வரும் கோபம்.
உணவுக்கட்டுப்பாடு.
புதுவகை  உணவுகள்.
நம்காலக் கருத்துகள்.
நிகழ கால கருத்துகள்.
எண்ணெய்  தேய்த்து குளித்தல்.
சின்ன சின்ன விஷயத்திலும்
எவ்வளவு பெரியமாற்றம்.
சாப்பிடும் நேரத்தில்
உடல் நலத்திற்காக
சொன்னாலும்,
அதில் அக்கறை என்று தெரிந்தாலும்
என்ன பாப்பம் செய்தோமோ என்ற  எண்ணம்.


ஈர்க்கவில்லை.
உள்ளத்தில் எதோ சோர்வு.
ஊக்கம்   குறைந்ததாலோ,
என்னவோ,அனைவரும்
ஏளனம்  செய்வதுபோல்  ஒரு
ஐயம்.
முப்பதாண்டு   அகவை வேறுபாட்டால்,
காலத்திற்கேற்ற  அறிவு குறைவுதான்.
அறுபத்தைந்து ஆண்டுகளில் ஆன மாற்றம்.



நாம்படித்த  ஆத்திச்சூடி,கைவீசம்மா கைவீசு,
அம்மா சுட்ட தோசை   சொல்ல,
அவர்கள் தமிழ் வராது என்பதுபோல்
ஆங்கில ஏ ,பி சி,பாடல்
நமக்கு ஒவ்வாததுபோல்,நாம்சொல்வது
அவர்களுக்கும் ஒவ்வாமை ஆகிவிட்டது.

நடந்து சென்றால் நல்லது என்பது,சொல்ல முடியாது.
இப்பொழுது வாசப்படியில் நான்கு சக்கர வாகனம்,
அல்லது இரு சக்கரவாஹனம்.
நாம்பெசுவதேல்லமே காலத்திற்கேற்றார் போல் இல்லை.

இப்பொழுது என்  தாத்தாவின்  நினைவு.
அவர் காந்தி கதை கூறி,
பென்சில்  சிறிதானாலும் எழுதச்சொல்வார்.
வெள்ளைக்காகிதம்  வீணாக்கக் கூடாது என்பார்.
ஒருபென்சில்வாங்கி  இரண்டாக ஒடித்துத்
தருவார்..

அப்பொழுது தாத்தாவின் மீது எரிச்சல்  வரும்
.
இன்று  சிக்கனம் பற்றி பேச முடியாது.

அறிவியல்  வளர்ச்சி.தொலைகாட்சி,கணினி
அதிகம் பார்க்காதே;கண் கெடுதல் என்றால்,
தாத்தாவின் மீது நான் பட்ட எரிச்சல் தானே ,
 பட்ட எரிச்சல்  தானே  பேரன் பத்திகளுக்கும்.
 அவர்களுக்கும்
தாத்தாவின் மீது வரும்.
இவ்வாறு  பல  .

இயற்கையின் மாற்றங்கள்.
அறிவியல்மாற்றங்கள்.
அகவை கூடி ஓய்வு பெறும்போது,
அலைபாயும்  பாயும் எண்ணங்கள்
அறியாமை,ஒவ்வாமை,
ஓஹோ! இது தான்

காலன்  வரும் நேரம்.
காலனை விரும்பி ஏற்கும் நேரம்.
கடமை முடிந்து விட்டது என
நீ   நிம்மதியாகப் போகலாம்
என    சக வயதினர்  பேசும் காலம்.
இயற்கையின் நியதி .
பெருசு அனைத்தும் செய்து சென்றுவிட்டார்.
கல்யாணசாவு  என சமாதனம் செய்து கொள்ளும் காலம்.
இயற்கையின் நியதி
ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

கருத்துகள் இல்லை: