சனி, செப்டம்பர் 08, 2012

மனம் கடும் மனம்
















மனம் கடும் மனம்.


அரச மரத்தடி பிள்ளையார்,
ஆற்றங்கரைப் பிள்ளையார் ,
இடுக்குப்  பிள்ளையார்,
ஈச்சனாரி பிள்ளையார்,
எல்லைப் பிள்ளையார்,
ஏரிக்கரைப் பிள்ளையார்,
ஐந்து முகப் பிள்ளையார் ,,
ஓடக்கரை பிள்ளையார்,
ஔவை விரும்பும் 
பிள்ளையார்.
எளிய பக்திக்கு ஏற்ற பிள்ளையார்.
ஆனால் 
மணக்குள விநாயகா !!!
எனக்கு 
உன் சதுர்த்தி கொண்டாட்டம் 
மனதில் ஒரு 
கலக்கத்தை 
வேதனையைத்தருகிறது.
உனது வண்ணவண்ண அழகு 
உருவங்கள் 
ஆராதனைக்குப்பின் 
அலைகளில் 
அலங்கோலமாகி 
கண்டங் கண்டமாக 
துண்டுகளாகி 
கடற்கரையில் 
மனிதக் கழிவுகளுடன் 
கரை ஒதுங்கி 
நீ சிதைவடையும் போது .

பக்தி என்ற பெயரில் 
உன்னை  சிதைக்கவேண்டுமென்று 
நீ 
என்று மனிதர்களை  வேண்டினாய்.
உருவ வழிபாடு 
உருவ சிதைப்பாக 
மாறியது 
என்னெஞ்சில் 

நெருப்பை 

 உருக்கி 
ஊற்றுவது போல் அல்லவா  இருக்கிறது.
அழகு உன் 
உருவங்கள் 
பல நாள் 
உழைப்பில்  உருவானவை.
ஆராதித்து கலை பொக்கிஷமாக 
போற்றி காக்க வேண்டியவை.
அதை கரைக்கும் 
மனம் கடும் மனம்.


கருத்துகள் இல்லை: