சனி, செப்டம்பர் 08, 2012

வள்ளுவரின்முதல்திருக்குறள்


வள்ளுவரின் முதல்  திருக்குறள் 

அகரமுதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் 
முதற்றே உலகு.

ஔவை 
எண் எழுத்து இகழேல்.

மன்னன் மண்ணின் மைந்தன்.
கற்றவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு.

இவ்வளவு சிறப்பு கல்வி  பற்றி கூறும் பொழுது 

அதை அறிவித்தது யார்?

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

அப்பொழுது கல்வி என்பது ஒருவனுக்கு 
இயற்கையாகவே   இறைவனால் கொடுக்கப்படுவது .
அதனால் தான் கவிஞயர்கள் 
வரகவி ஆனார்கள்.
வரகவி பாரதியார் என்கிறோம்.
ராமாயணம் எழுதியவர்கள் அனைவருமே 
இறை அன்பர்கள்.
கவி அரசர் கண்ணதாசனும் சரி ,
கலைஞர் கருணாநிதியும் சரி 
அந்த சொல் நயம் தெய்வீகமாக வெளிப்படுவதுதான்.
இசை ஞானிகள் அனைவருமே இறைப்பற்று மிக்கவர்கள்.
புதிய கண்டு பிடிப்புகள் 
அனைத்தும் அனைவராலும் நினைத்துப்பர்த்தவை.
ஆனால் அதி முதலில் கண்டுபிடித்தவர்கள் 
எந்தப்பல்கலையில் பட்டம்பெற்றார்கள்.?
ஆனால் அவர்கள் எழுதியதைப் படித்தும் பேசியும்  பாடியும் 
வாழ்பவர்கள் பலகோடி.
கண்டுபிடிப்புகளின் பயனாளிகள் பல்லாயிரம்கோடி.
மனிதனின்  ஒரு சொல் ஒருவனை மஹானாக மாற்றுகிறது.
மனிதனின் ஒரு சொல் அவனியில்  அவனை  எதிரி  ஆக்குகிறது.
மனித எண்ணங்கள்,அவன் வெற்றி, தோல்வி,ஆற்றல்,இயலாமை,

ஆசைகள்,பெராசிகள்,பொறாமை,காதல்,களவு,அனைத்துமே 
அவன்பேச்சாக வெளிப்படுகிறது.
ஆகையால் தான் வள்ளுவர் 
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம்தலை  என்றார்.
செவிவழிச் செய்திகள்,கதைகள் ,பழமொழிகள்,திறன் 
ஆகியவை நூலைப்படித்ததைவிட மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு 
தெரிந்து புரிந்ததுதான் அதிகம்.
ஆகையால் தான் 
கற்றலில் கேட்டல் நன்றே   என்றனர்.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்றனர்.
அறிவும் ஆற்றலும் பதவியும் செல்வமும் 
முயற்ச்சியால் கடும் உழைப்பால் வருவது.
ஆனால் ஞானம் இறைவனளிப்பது.








கருத்துகள் இல்லை: