புதன், செப்டம்பர் 12, 2012

மக்கள் படும் திண்டாட்டம்.


மக்கள் படும் திண்டாட்டம்.

கோட்டூர்புரம்  கோட்டை 
யாகும் என செலவு  கோடி .
கோட்டையான ஓமந்தூரார் 
பழைய கோட்டைக்கே 
மாற்ற கோடி.
அண்ணா வளைவு 
தாங்கிப் பிடிக்க 
நாளுக்கு நான்கு லக்ஷம்.
கொட்டுர்புரம் 
நூலகம் செயல்படாதிருக்க 
வழக்குச்செளவு.
அரசு சாதனை விளக்கமளிக்க 
பல கோடி.
வரிகட்டும் மக்களுக்கோ 
தண்ணீர் இல்லை .
மடிப்பாக்கம்,
ராம்நகர்,குபேர் நகர் 
மக்கள் 
சாலைவசதியின்றி 
படும் அவலம்.
பள்ளிக்கரணை 

ராஜேஷ்  நகர் ,

வேளச்சேரி  என 
ஆயிரக்கணக்கில் 
மக்கள் படும் துயரம் 
அதற்கு திட்டமிட்டு 
துயர் நீக்கும் பணியில் வேகமில்லை.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பால் 
பலகோடி வீண் விரயம்.
கூடங்குளம் 
கூட்டு சதியா/?
நாட்டுக்கு சனியா?
அஸ்திவாரம் போடும்போது 
போராடாமல் 
வரிப்பணங்கள் கோடி கோடியாக 
விரயமான பின் காட்டும் 
வீரப்போராட்டம் 
வீண் போராட்டமா/?
அடிப்படைவசதி செய்யாமல் 
வரிப்பணத்தை விரயம் செய்யும் அரசு.
எண்ணி ப்பார்க்கதுடிக்குது  மனசு.
தண்ணீர் இல்லை. 
மின்சாரமில்லை.
கோட்டை  கட்டவும் 
வளைவு மாற்றவும் 
கோடிக்கணக்கில் 
மக்கள் பணம்.
நெஞ்சம் பொறுக்கவில்லை,
இந்த நிலைகெட்ட 
அரசியல் ஊழலால்.



கருத்துகள் இல்லை: