வியாழன், ஜூலை 19, 2012

EDUCATIONAL STRUGGLE WHY?




தனியார்  பள்ளியில் பின் தங்கிய, குறிப்பாக பொருளாதாரத்தில்  பின் தங்கிய

25% மாணவர்களை  தனியார்  பள்ளியில் சேர்க்கவேண்டும்  என்ற அரசு

 உத்தரவு  மிகவும் சிந்திக்க வேண்டிய  ஒன்று.
 பெங்களூர்  ஆக்ஸ் போர்டு  பள்ளியில்  25% மாணவர்களை அவமானப்படுத்துவதாக  செய்தி.
  25% மாணவர்களை ஏன்  தனியார் பள்ளியில் சேர்க்கவேண்டும்? அரசுப்பள்ளிகள்  இயங்குகிறதா  இல்லையா?

தனியார் பள்ளி மாணவர் கள்   சிலர் கொண்டுவரும்  அழிப்பான்  ரூபாய் 50.

 அவர்கள்  வந்திறங்குவது    பல  லட்சங்கள்  மதிப்புள்ள மகிழுந்து.

  அவர்கள் எழுதும் குறிப்பேடு அரசாங்க வெளியிடும் குறிப்பேடு போல்
 இ ரண்டு-மூன்று  மடங்கு விலை உள்ளது.
போன்றே காலணி ;சீருடை;உணவி கொண்டுவரும் லஞ்ச்  பாக்ஸ். 
  இது மாணவர்கள் நிலை.

ஆசிரியர்கள் ஊதியம்.பள்ளி பராமரிப்பு,குடிதண்ணீர்,கழிப்பிடம் போன்ற

வசதிகளுக்கு சிலவு ,ஆண்டுதோறும் பள்ளியை புதுப்பித்தல் ,பேருந்து

வசதிகள்,ஒவ்வொரு வகுப்பறைக்கும் மின்வ்சதிகள்,தலைமை ஆசிரியரின்

குளிர் சாதன அறைகள்,ஆசிரியர்கள் அமர வசதியான

இருக்கைகள்,ஓய்வறைகள்,பெற்றோர்- மாணவர்கள் தங்கள் பள்ளியில்

அதிகம் சேரவேண்டும் என்ற  தளரா உழைப்பு; இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் 

என்ற ஒரு அரசு ஆணை மட்டும் தான்.பொருளாதார மானியம் என்பது ஒரு

 பைசா கிடையாது.

ஆனால் கடு பிடிகள் அதிகம்.  தர்ம  சிந்தனைகள் உள்ளவர்கள் தான் பள்ளிகள்

 நடத்தவேண்டும் என்றால் சராசரி சிலவுகள் கணக்கிட்டால்  கண்ணீர்தான் 

வரும்.


200  மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு குறைந்த பக்ஷம் ரூபாய் 5000/;ஊதியம் என்றால்  மாதம் ரூ.40,000/;
 ஆயா,துப்புரவுத்  தொழிலாளி தண்ணீர் எடுத்துவைப்பவர், பள்ளிகூட்டுவோர் மின்கட்டணம்,தொலைபேசிக்கட்டணம், முதலுதவி மராமத்து என்றவகையில் ரூ.15,000/
;நிர்வாகத்தினரின் அன்றாட மன உளைச்சல்  மாணவர்கள் பாதுகாப்பிற்கு மதிப்பிட முடியாது.

பள்ளிகள் துவங்கியதே வருமானத்திற்கு என்று  மனசாட்சி

உள்ளவர்களுக்குத்  தெரியும்.

  சில க ல்லூரி குறிப்பாக தனியார் பொறியியல்  கல்லூரி பேராசிரியர் 

ஊதியமே மாதம் 10,000/மட்டுமே
.அதைப்பற்றி யாருக்குக் கவலை .அவர் ஏன்   இப்பணிக்கு வரவேண்டும்.(இக்கல்லூ ரிகள் யார் நடத்துகின்றனர் என்பது உலகறிந்த ரகசியம்) சரி. 

ஒரு தொடக்கப்பள்ளி நடத்த  குறைந்த பட்ச சிலவு  மாதம் 60000/;
வருடம் 60,000 x 12 =  7,20,000/-

தர்மம் செய்பவர்கள் யார்.?

அரசியல் வாதிகள் நடத்தும் பள்ளிகள் ;கல்லூரிகள் 

 ;ஏழைகள் தன பிழைப்புக்காக   நடத்தும் பள்ளிகள் 

,அனைத்தும் மூடிவிட்டு அரசே பள்ளிகள் நடத்த முடியுமா?
 அனைத்துத் தரப்பு மக்களும் இதை  ஏற்பார்களா?

குளிர் சாதனா வண்டியில் பயணம் செல்வோர்,

 கட்டைவண்டியில் செல்வோர் என்ற பொருளாதார நிலை நம் நாட்டில்.

தனியார் பள்ளிகளால் அரசுக்கு பல கோடி சிலவுகள் மிச்சம்.

 கல்வி என்பது அரசர் ஆண்ட காலத்தில் இருந்து இன்று வரை 

பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது

.ஒரு மகிழ்ச்சியான கசப்பான உண்மை

.  
அபதுல் கலாம் அரசுப்பள்ளியில் படித்தவர்.

  கமலஹாசனும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர்.

   அரட்டை அரங்கம்  புகழ்  விசு அவர்களும் அரசு உதவி பெரும் பள்ளியில்

 படித்தவர்தான்.

   அறிவு,திறன் என்பது பற்றி திரு கமல் மற்றும் விசு அவர்களுக்குத்தெரியும்
.
  நான் படித்த மாநகராட்சிப் பள்ளியில் மாணவர் எவ்வளவு  ஒழுக்கமாக 

இருந்தனர் என்பதற்கு தேர்வு மையமே மாற்றப்பட்ட வரலறு உண்டு.

கல்வி சம்பந்த மான,  கட்டணம் சம்பந்தமான போராட்டம் தேவையா?

 விந்தையான  அரசியல்  என்றே தோன்றுகிறது.
  

தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்காமல் 

தொண்டாற்றுகின்றனர்  என்பதுதான்  உண்மை.




கருத்துகள் இல்லை: