புதன், ஜூலை 04, 2012

6.Why the Hindus voice differs? Why there is no one voice Part-6




  "எல்லோருக்கும்  நல்ல  அறிவைத் தர வேண்டும்"  என்ற  ரகுபதி  ராகவ

ராஜாராம்   என்று பஜனைப்பாடல் பாடி மறைந்த தேசத்தந்தை  மற்றும் தேச

 விடுதலைக்காக போராடிய பல புகழ் பெற்ற தலைவர்கள், விடுதலை என்ற

 சிகரத்தில் கொடி ஏற்றி பறக்கவிட்டு, அதன் அடிக்கற்களாய் அடையாளம்

தெரியாமல் இருக்கும் தொண்டர்கள் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடையுமா

 துன்புறுமா?

நமது நாட்டில் படையெடுத்து  வராதவர்  கிடையாது.

மங்கோலியர்,கிரேக்கர்கள்,,பிரான்ஸ்,,டச்சு ,ஆங்கிலேயர்கள்,,முகலாயர்கள்..

இவர்களுக்கு  உள்ளே வர உதவியவர்கள் யார்//?

சந்திர குப்தர்  காலத்தில் இந்திய கிரேக்க திருமண உறவு ஏற்பட்டது.

பின்னர் அரசியலில் பல நாட்டு ரத்த பந்தங்கள் அறிந்தும் அறியாமலும்


ஏற்பட்டு மனித உறவு  இன ,மொழி,,நாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதை

இன்றுவரை( ராஜீவ்ஜி ) உறுதி படுத்தி உள்ளோம்..


விடுதலை அடைந்து 65 ஆண்டுகளில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதில் ஐயமில்லை
 என்றாலும்  பல ஊழல்கள், தடைகள், சுயநலமிகள், சுவிஸ் வங்கி

கருப்புப்பணம், பத்திரப் பதிவு அலுவலகங்களில்,போக்குவரத்து 

காவல்துறையினர் சிலரின், நீதித்துறையில், கல்வித்துறையில், 

மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள் 

 இறைவனின் மீதே ஐயப்பட வைக்கும் நிகழ்ச்சிகள்.

 இதற்கிடையில் நாடு முன்னேறிக்கொண்டு தான் உள்ளது..

நாட்டைத்துண்டாட நினைக்கும் கும்பல்,

 தீவீரவாதம், தேர்தல் என்பது பணசாம்ராஜ்யங்களுக்கு ,

ஊழல்களுக்கு கிடைக்கும் வெற்றி யாகவே கருதப்படுதல்,

 கை ஊட்டு கொடுத்தல், பெறுதல் பாவம் என்ற நிலை மாறி

அவை நியாயப்படுத்தப்பட்டு அவை இருந்தால்தான் வாழ்க்கை

என்ற நிலைமாறிய  நியாயம்..

 நீதித்துறையில் ஏழைகளுக்கு உடனடி தண்டனைதான்..

ஒருவர் இடத்தில் மிக தைரியமாக ஆக்கிரப்பு செய்து வீடு கட்டலாம்.

.சிவில் வழக்கு. இழுத்துக்கொண்டே செல்லும். தீர்ப்பு வராது.

ஏழையின் இடத்தை, கோவில்  இடத்தை, பொது இடத்தை,ஆக்கிரமிக்கலாம்..

போக்குவரத்துக்காக  சாலை அகலப்படுத்த முடியாது.  அரசியல் வாதிகள்,

பணமுதலாளிகள்  செல்வாக்கு இருந்தால், அதிகாரிகள் உடன் இருந்தால் போதும்.


ஒரேகுரல் எப்படி ஒலிக்கும்..

   1.அண்ணா வாழ்க. நாமம் வாழ்க.. நான் தி..மு..க..அண்ணாவின் கொள்கை , அண்ணாவின் ஆட்சி --எனது குறிக்கோள்..


   2.அண்ணா  நாமம் வாழ்க..புரட்சித்தலைவர் வாழ்க;;அண்ணாவின்
ஆட்சி ,அண்ணாவின் கொள்கை  எங்கள் கொள்கை..அ ..தி..மு..க.

    3.அண்ணா   எனது உயிர்..அண்ணா வின் கொள்கை என் மூச்சு..ம..தி..மு..க..

     4.அண்ணா  அண்ணா..அண்ணா பெயரில் ஆட்சி மலரும்..--.தே..-தி..மு..க.

 நாமம் அண்ணா.

பாட்டாளிகள் மு..க..பாட்டாளிகளுக்காக;;வன்னிய சமுதாயத்திற்காக .வாழ்க
அண்ணா..வாழ்க  திராவிட கட்சிகள்..வாழ்க கலைஞர்..வாழ்க அம்மா..வீழ்க திராவிடக்கட்சிகள்.....வாழ்க தேசீய கட்சிகள்..புரியலை ....

தேசீய கட்சிகளிலும் இதே நிலை..

ஒரே மதம்..பல சம்பிரதாயங்கள் .தன்  தன்  மரியாதை,,புகழ் ப்ரதானமாக்கும்
செயல்கள்..

ஒரே  தலைவர்..
 
பல  தலைவர்கள்..

எப்படி ஒலிக்கும்  ஒரே குரல்...........மதத்திலும்  இல்லை..தேசீய மொழி
கொள்கையும்  இல்லை.
அரசியலி லும் இல்லை.
.சைவம்--அசைவம் என்ற உணவிலும் இல்லை..
 ஒரே குரல்  எப்படி  ஹிந்து மதத்தில் ஒலிக்கும்..
  எப்படி ஐயா ஒரே குரல் ஒலிக்கும்..

கருத்துகள் இல்லை: