புதன், ஜூலை 04, 2012

5..Why the Hindus voice differs? Why there is no one voice Part-5

ஹிந்தியில் பக்தி காலத்திற்குப்பின்,   முகலாய- இந்துக்கள் ஒற்றுமைக்குப்பின், ஆனந்தமான  மக்கள்

       


        சிருங்கார ரச,பொழுதுபோக்கில் ஈடுபட்டனர்.

"கண்டதே கோலம் கொண்டதே காட்சி "என்ற நிலையில் சூதாட்டம்,

மது,,மாது என்ற கேளிக்கைகளில் ஈடுபட்டனர்.

.நாட்டைப் பற்றிய எண்ணம் குறைந்தது.

கிருஷ்ணனும் ராதையும் இறைவன் நிலையில் இருந்து

இறங்கி  காதல் லீலைக்காக வர்ணிக்கப்பட்டனர்.

..இந்த ரீதி காலத்தின்  முடிவில்  ஆங்கிலேயர்  இங்கு வாணி கத்திற்காக

  வந்து ஆட்சியாளர்களாக மாறினர். இந்தியாவின் தனிதனி நாடுகள் ,சமஸ்

தானங்கள் ஆங்கிலேயர்கள் வேரூன்ற வசதியாக அமைந்தன.

.பல சட்டங்கள்,,போர்கள்,,பிரித்தாளும் சூழ்ச்சி,,வாரிசுரிமை சட்டம்

போன்றவற்றால் நாட்டின் ஆதிக்கம் ஆங்கிலேயர் கைக்கு சென்றது..

இந்நிலையில் ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர் திருத்த வாதிகள்

 தோன்றினர்.விதவா மறுமணம்,,உடன் கட்டை ஏறுதல்,பாலர் விவாஹம்,,

போன்ற சீர் திருத்தக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

.பெண்கள் கல்வி ,பெண்கள் முன்னேற்றம் ,ஹரிஜன ஆலய ப்ரவேசம்,

பொதுக்கிணற்றில் வேறுபாடின்றி தண்ணீர் எடுத்தல் போன்ற காந்தீயக்

கொள்கைகளை  ஜமன்லால் பஜாஜ்,,ராஜாஜி..ஈ..வே..ராமசாமி நாயக்கர்

போன்றோர் பெருமளவில் ஆதரித்து வெற்றிகண்டனர்..

மகாத்மா ஹிந்து--முஸ்லிம் ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டார்..

ப்ரார்த்தனைப்பாடலில் -हिन्दू -मुस्लिम - सीख- ईसाई ,आपस में है भाई -भाई என்றும் ,

ஈஸ்வர அல்லா தேரே நாம் சப் கோ சன்மதி தே பகவான் என்றும்

ஒற்றுமைக்காகவே தன்  உயிரையும் நீத்தார்..(தொடரும்)) 

கருத்துகள் இல்லை: