வெள்ளி, ஏப்ரல் 06, 2012

natpu. நட்பு

                                            நட்பு

நல்ல நண்பர்கள்,அமைவது ஒரு வரப்பிரசாதம்.
ஹிந்தியில் ஒரு தோஹா ,

நல்லவர்கள்,நல்ல நண்பர்கள் பிரிந்து சென்றால்.
மறுபடியும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
விலை உயர்ந்த மணிமாலை அறுந்துவிட்டால்,
நாம் மீண்டும் சரிசெய்து சேர்த்து
 அணிந்து   கொள்வது   போல்,
விலை மதிக்க முடியாத
 நல்ல நண்பர்கள் பிரிந்து சென்றால்
மீண்டும் சேர்த்துக்கொள்ள  வேண்டும்
.விட்டுவிடக்கூடாது.
நண்பர்கள் பலவிதமாக இருப்பார்கள்.
எனக்கு ஒரு நண்பன்.
அவனுடன் சேர்ந்து மது அருந்தவில்லை
என்ற கோபம். நட்பு இருந்தது . ஆனால்
நெருக்கம் இல்லை.
மற்றும் பல நண்பர்கள்.
சுயநலத்தால் நண்பர்களாக இருப்பவர்கள்.
தன் காரியம் நிறைவேற நட்பு பாராட்டுவார்கள்.
நிறைவேற்றிய  பின் நம்மை சிக்கலில் மாட்டி விட்டு
கிண்டலும்  செய்வர்.
சில நண்பர்களுக்கு அவர்களின் தவறுகளை
 சுட்டிக்காட்டினால் பிடிக்காது.
கபீர் தாசர்  கூறினார்-----
தங்கள் குறைகளை சுட்டிக்காட்டுவோரை,
அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.
தண்ணீரும் சோப்பும் இன்றி அழுக்குத்த் துணி
சுத்தமடையாது.அவ்வாறே தங்கள் குற்றம் குறைகளை,
எடுத்துச்சொல்ல நல்ல நண்பர்கள் இல்லை என்றால்
திருந்த முடியாது.
தமிழில் ஒரு பழ மொழி உண்டு.--
அழுகச்சொல்லுவார் தன்  மனிதர்,
சிரிக்கச் சொல்லுவார் பிறத்தியார் என்று.
தவறு  செய்தால்  கண்டிப்பவர்களே நல்ல நண்பர்கள்.
மன சாட்சி இன்றி பணமே சாட்சியாக உள்ள நண்பர்கள்,
உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது.
கர்ணன் தான வீரன்.தான் செய்த   தர்மத்தின் புண்ணியத்தையே
தானமாக அளித்தவன்.நண்பனின் செஞ்சோற்று கடன் தீர்க்க,
அதர்மத்தின் பக்கம் நின்றதால்,நண்பனுக்கு துரோஹம் செய்யாததால்
உயர்ந்தவனான்.
நட்பு என்பது வேறுபட்ட கருதுள்ளவர்களுக்கிடையிலும் ஏற்படும்.


கருத்துகள் இல்லை: