ஆன்மீகம்   மன   அமைதிக்கு,
அறிவியல்  மன மகிழ்ச்சிக்கு.
ஆன்மிகம்  மன நிறைவிற்கு.
அறிவியல் மன ஆடம்பரத்திற்கு.
அறிவியல் பொருளுளவர்களுக்கு,
ஆன்மிகம் பொருள் அறிந்தவருக்கு,
அறிவியல் செயற்கையில் இயற்கை காண,
ஆன்மிகம் இயல்பான இயற்கை காண.
அறிவியலால் ஆழ்கடல் ஆராய்ச்சி,
ஆன்மீகத்தால் ஆள் உள  ஆராய்ச்சி.
அறிவியலால் உடல்,மன, நலக் கேடு.
ஆன்மீகத்தால் உடல் நல உள நல மேன்மை.
அறிவியல் கட்டுப்பாடற்ற வாழ்க்கை.
ஆன்மிகம் கட்டுப்பாடான வாழ்க்கை.
ஒப்பிலா ஆனந்தத்திற்கு ,
ஆன்மிகம் கலந்த அறிவியல் வாழ்க்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக