அறிவு வளர வளர நாட்டில் ஆன்மீகமும் வளர்கிறது.கருப்புப்பணமும் வளர்கிறது.கற்பழிப்பும் பெருகுகிறது.ஊழல் பெருகுகிறது.கொலை,தற்கொலை,
விவாகரத்து,கள்ளக் காதல்,பொய்கணக்கு,கையூட்டு,நீதிமன்றத்தில் பொய்
சாட்சிகள்,நீதி மன்றத்தீர்ப்பை மதியாமை,தேர்தல் முறைகேடுகள்,தேர்வு முறை கேடுகள்,திறமையுடன் குற்றங்களை மறைத்தல்,வேலியே பயிரை மேய்த்தல்,
தேவாலயங்கள் ஊழல் ,இறைவன் பெயரைக்கூறி ஏமாற்றங்கள்.
இவை இன்றைய கலியுகத்தில் என்று நினைத்தால்,இவைa புராணங்கள்,மத நூல்களிலும் காணப்படுகின்றன.
அதனால் தான் இவ்வுலகில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் .நல்லவர்கள்,நீதிமான்கள் நமக்கு உதவ வேண்டும்.
என் அனுபவத்தில் மேலுள்ள குறைபாடுகள் ஊடகங்களால் பெரிது படுத்தப்படுகின்றன. .
எத்தனையோ பெரியவர்கள் l,மகான்கள் ,பரோபகாரிகள் நாட்டில் உள்ளனர். .நேர்மை யான இறை அன்பர்கள்
உள்ளனர்.அனால் அவர்களை அதிகம் யாரும் கண்டு கொள்வது இல்லை. . .அவர்களுக்கு ஊழல்வாதிகளுக்கு கொடுக்கும் மரியாதை
தரப்படுவதில்லை.மகாகவி பாரதி போல் வறுமையில் செம்மையாக வாழ்கின்றனர்.அத்தகையோர்களால் தான் உலகம் வாழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக