புதன், பிப்ரவரி 29, 2012

kadavul kutram.

கடவுளின் குற்றம்.

நம் நாட்டில் பலர் பல விதமாக இருக்கிறார்கள்.அறிவாளிகள் அதிகம் இருந்தால்
பல எண்ணங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பே பல சம்பிரதாயங்கள்.அறிவுள்ளவன் தன் சிந்தனைகளை நல்லதாக நினைத்து நிறைவேற்றத்தடையாக இருந்தால் சிறிது மாற்றம் செய்து
புதிய சம்பிரதாயத்தை உருவாக்குகிறான்.அவன் அறிவாற்றலால் ஒரு கூட்டத்தை  கூட்டுவதில் வெற்றிபெறுகிறான். ஒரு புதிய சம்பிரதாயமாக மாறுகிறது.ஹரியும் சிவனும் ஒன்று என்றொரு கூட்டம்.வீர சைவம்  என்ற கூட்டம்.லிங்காயத்து சைவம்.வைஷ்ணவ  சம்பிரதாயம் அதில் வட கலை தென் கலை.சமண மதம் அதிலும் திகம்பரர் ,svethaambarar  என்ற பிரிவு
உலகளவில் பரவியுள்ள கிருஸ்தவ மதத்திலும் கதோலிக்,புரோடோஷ்டன்ட் .செவன்த்-டே -என்ற பிரிவுகள்.முகலாயர் மதத்தில்
ஷியா ,சன்னி என்ற பிரிவுகள்.
அரசியல் தலைவர்கள் ஒருவரே என்றாலும் அவர்கள் பெயரைச்சொல்லி பல தலைவர்கள் .
மேற்கண்ட சிலரின் அறிவாற்றலால் அப்பாவி மக்கள் அவர்களிடம் பெரும் சில நன்மைகளால் ஒருவொருக்கொருவர் சண்டை இடுகின்றனர்.அந்தந்த
பிரிவுத்தளைவர்கள் தொண்டர்களிடம் பெற்ற பணத்தால் சுகபோக வாழ்வு வாழ்கின்றனர்.
தொண்டர்கள் அடிபட்டும், உயிர்த்தியாகம் செய்தும் தலைவர்களை சுயநல ஜடமாக்கு கின்றனர்.இறைவன் அனைவருக்கும் ஒரே எண்ணங்கள் மனிதநேயம்  ஏன் தரவில்லை.



கருத்துகள் இல்லை: