ஆலய வழிபாடும் உள்ளத்தூய்மையும்.
ஆலயம் செல்கிறேன் என்றதும் .
ஆனந்தம் அமைதி தரும் என்றோர் கூட்டம்.
ஆலயமா?என்று etho செல்லாத இடம் என்போர் சிலர்.
அவர்கள் பார்வை,அருளுள்ள பார்வை.
அடுத்த சிலரின் பார்வை பொருளுள்ள பார்வை.
ஒரு கூட்டம் ஆண்டவன் அருளை மட்டும் பார்க்கிறது.
சிறுகூட்டம் சமுதாய அவலங்களையும் பார்க்கிறது.
முழு கூட்டமும் ஒன்று பட்டால் ஆலயங்கள்
ஆதர்ஷமயமாகும்.
பெருகிவரும் பக்தர் கூட்டம்,
இறைவனின் தர்ஷனம் செய்தால்.
அனுக்ரகம் கிடைக்கும் மூடநம்பிக்கை,
குறுக்கு வழியில் செல்லும் காட்சி,
பிரார்த்தனை என்ற பெயரில்,
பொருளை வாரி இறைத்து ,
பொருள் பெற வேண்டுகோள்.
அருள் பெற இல்லை.
அருளுள்ள இறை பார்வை பெற,
பொருள் உள்ள பிரார்த்தனை தேவை.
பொருளே ஆதாரம் என்ற பிரார்த்தனை ,
அருளே ஆதாரம் என்றாலே ஆண்டவன் அருள் கிட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக