அலைமகள் அனுக்ரகம் அடையவே,
அனுதினமும் அக்கறையுடன் பாடுபட்டு,
அலையாய் அலைந்து குறிக்கோளில் ,
வெற்றி பெற்று குதூகலிக்கும் வேளையில்,
லக்ஷம் சேர்ந்ததில் லட்சியம் மறந்து,
கோடி சேர்க்க குறுக்கு வழியில் சென்று,
அறம் மறந்து அஹங்காரத்தில் மிதந்து,
அதிகார ஆசையால் அமைச்சராகி,
எதிர்க்கட்சியால் ஏசப்பட்டு,
பொது மக்களால் அடுத்த தேர்தலில்,
அலட்சியம் செய்யப்பட்டு,தோல்வி அடைந்து,
மத்திய புலனாய்வு,பொது மாக்கள் புகார் என
தங்கையின் பார்வை விலகி அக்காளின்
பார்வையால் அமைதியிலந்தான் .அலைமகள்
சிக்கிய கொடியன் கையில் அவள் அக்காவின் பார்வை ,
avalai மகிழவைத்தது; அறம் கடமை மறந்தவன் ,
அலைமகள் கிருபை இருந்தும் அமைதி இழந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக