புதன், ஜனவரி 18, 2012

my mother and her hard work (tamil)

என் அன்னை அன்பின் சிகரம்.
உழைப்பு.
 தன் கடமை ,தன் குறிக்கோளை
 அடையும் ஒரே முயற்சி.


தனது பதின் மூன்றாம் வயதில்
திருமணம். என் தாத்தா வேம்புசர்மா   (அம்மாவின் அப்பா)தமிழ் சமஸ்கிருத சமப்ப்ரதான வித்வான் . அவர் மூலம்  கிடைத்த  சமஸ்கிரத மொழி அறிவும் தமிழறிவும் கர்நாடக சங்கீத அறிவும்  மூலதனமாக மாமியார் வீட்டிற்கு வந்தபின் அங்குள்ள சூழ்நிலை,பெரிய குடும்பம் .உழைக்காமல் சீட்டாட்டம் வெட்டிப்பேச்சு என  உழைக்காமல் உண்ணும் மாமியார் வீட்டுக்கூட்டம்.பரம்பரை சொத்துக்கள் அழித்து வறுமையின் சாயல் தோன்றும் நேரம்.
அச்சமயம் பக்கத்து வீட்டு மாமியால் தூண்டப்பட்டு மாமனார் அனுமதி பெற்று
நான் பிறந்து மூன்று வயதாகும் போது பள்ளிப்படிப்பு துவக்கம் .பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில்.
இத்துடன் சமஸ்கிருதம் தேவனகிரி எழுத்தறிவால் ஹிந்தி வகுப்புகள் துவங்கி
ஹிந்தி பிரசாரத்தில் ௧௯௫௨ முதல் ஈடுபட்டார்.அத்துடன் பெண்கள் வேலைக்குப்போகக்கூடாது,சங்கீதப் பயிற்சி,ஹார்மோனியம் வாசிக்கக்கூடாது என்ற தடை.உறவினர்கள் வீண் பழிச்சொல்.ஆண்டுக்கு ஒரு குழந்தை. சரியான பராமரிப்பு, போதிய மருத்துவ வசதி இன்மையால் இரண்டு மூன்று வயது வளர்ந்த குழந்தைகளின் மரணம். வறுமை,மனத்தால் ஏற்படும் துன்பம்.உறவினர்களின் ஏளனம். இதற்கிடையில் வயிற்றுப் பசிக்காக   உழைப்பு.
மன தைரியத்துடன் ஹிந்தி தேர்வுகள்  தேர்ச்சி அடைந்து சிங்கம்புணரி ,கொம்புக்காரநேந்தால் போன்ற ஊர்களில் அரசுப்பள்ளியில் பணியாற்றி குடும்ப  சூழலால்  மீண்டும் பழனிக்கே வந்து நெய்க்காரப்பட்டி,ஆயக்குடி  ,கோரிக்கடவு உயர்நிலைப்பள்ளிகளில் ஹிந்தி
ஆசிரியை யாக பணியாற்றினார்.வீட்டுச்சூழ்நிலையால் ஆசிரியர் பயிற்சி செல்லவில்லை.பழனியில் இருந்து நெய்க்கரபட்டி குருவப்ப உயர்நிலைப்பள்ளிக்கு
கிட்டத்தட்ட  ஈரெட்டு   மைல்கள் நடந்தே சென்று நடந்தே வருவார் இந்நிலையில் கர்ப்பம் வேறு. இவ்வாறே ஆயக்குடி ஐ.டி. ஒ .பள்ளிக்கும்.
இதனால் முதுகுத்தண்டுவடம் பாதிப்பால் எலும்பு பாத்திது படுத்ட படுக்கையாக இரண்டாண்டு.அதற்குள் இருமொழி  கொள்கையால்  ஹிந்தி ஆசிரியர்களுக்கு பணி இழப்பும் வேலைவாய்ப்பும் இல்லாத நிலை.
இந்நிலையில் என் மாமா வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த பால குருகுலம்
என்ற சிறுவர் பள்ளி நடத்திய ஒரு பெரியவர் ஆலோசனை பெயரில்
பழனியில் பால முருகன் நர்சரி பிரைமரி பள்ளி  1968 இல் துவங்கினார். அதற்கு
ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆசிரிய நியமனம் செய்தார்.கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகள் வருமானமின்றி நடத்திவந்தார். அப்பொழுது பழனியில் கென்னடி நர்சரி பள்ளியும் பாலமுருகன் பள்ளியும் தான் பழனியில்.
அம்மா பழனி அடிவாரம்,சண்முகபுரம் போன்ற இடங்களிலும் கிளை களைத்துவக்கினார் . நான் உதவி செய்து வந்தாலும் வருமானம் இல்லாததால் சென்னைக்கு பணிபுரிய சென்றுவிட்டேன்.அம்மா  என் தங்கை,என் தம்பி,என் தந்தை  நால்வரும் .தம்பிக்கு ஐந்து வயது. தங்கைக்கு பத்து வயது. நான் என்னால் முடிந்த பணஉதவி அவ்வப்போது. எனக்கும் மூன்று  குழந்தைகள். சென்னை வாசி. அந்நிலையிலும் நான் செய்த பணவுதவிகள் வட்டிக்கு வாங்கி எனக்கு பெரும் சுமை.
அம்மாவின் கடின உழைப்பு.அப்பள்ளிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பழனி மாநகரில் இயங்கும் அப்பள்ளி சுயநலமில்லா நிர்வாகத்தாலும்,ஆசிரியைகளின் சேவை மனப்பான்மையாலும் நாற்பத்திநான்கு ஆண்டுகளாக வளர்ந்து பழனி மக்கள் விரும்பும் பள்ளியாக உள்ளது.
பொருளாதார வசதிகள் இருந்தால் மேலும் சிறந்த பள்ளியாக மாற்றலாம்.
எல்லாம் வல்ல முருகன் அருளால் வளரும் பள்ளிக்கு இப்பள்ளியில் படித்து
உயர் நிலையில் உள்ளோர் உதவினால் மேலும் வசதி உள்ள பள்ளியாகி  எனது
தாயார் கோமதி அம்மாளின் கனவு நினைவாகும். இப்பொழுது எல்.கே.ஜி முதல்  ஐந்தாம் வகுப்பு வரை  217 மாணவர்கள்  படித்து வருகின்றனர்.
பழனி முருகன் அருள் கிட்டும் அவன் அருளால் பள்ளி  வளரும்  என்று என் தாயார் ப்ரரர்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை.
 இன்றும் அம்மா பிரார்த்தனையிலும்   .
  என் தம்பி    அம்மாவின் கனவை நிறைவேற்றும் பணியிலும்  ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: