திங்கள், நவம்பர் 28, 2011

sanaathana dharmam

சனாதன தர்மம்

மனிதன்  ஆரம்ப காலத்தில் இருந்தே இயற்கையை வெல்ல முடியாமல்  இயற்கையை  அதீத சக்தி உள்ள ஆண்டவனாக வழிபட ஆரம்பித்தான்.நவ கோள்களையும் ஆண்டவனாக உருவகப்படுத்தினான்.பூதேவி  என்று பூமியை மட்டும்  எதையும் தாங்கும் பெண்ணாக உருவகப்படுத்தினான்.மனிதனைக் கருவில் சுமந்து பெறுபவள் பெண்.பூமி தாவரங்களின் விதைகளைச் சுமந்து தனைப் பிளந்து  வளர்க்கிறாள். பொன்,வைரம்,வைடூரியம்,நிலக்கரி போன்ற அனைத்தையும்  தோற்றுவிக்கிறாள்.இறந்தபின் மனிதனின் சடலத்தையும் தனதாக்கு கிறாள்.மனிதன் வாழ நீர் நிலத்தின் மூலமாக.பெட்ரோல் நிலத்தின் மூலமாக. வாழும் மனிதனின் அஸ்திவாரமாக நிலமங்கை.

நிலத்தில் நீர். அங்கே அக்னி. அக்னிதேவனை பெரும் சக்தியாக மாற்ற வாயு.
அந்த அக்னி அனைய நீர்.அந்த நீரைப் பொழியும் ஆகாயம். இந்த சக்தி எப்படி எங்கிருந்து உண்டாகிறது என்ற ஆய்வுகள்.சுட்டெரிக்கும் சூர்யன்.குளுமை ஏற்படுத்தும் சந்திரன்.இந்த இயற்கையின் எதிர்மறை சக்திகள்.

இவைகளை கட்டுப்படுத்த அறிவியலா?ஆன்மீகமா? இதுதான் அறிவியல் வளர்ச்சி பெற்ற நாட்டிற்கும் ஆன்மீக சடங்குகள் நடத்தும் நாட்டிற்கும் நடக்கும் போராட்டம்.

சனாதன தர்மத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள அறிவியல் உண்மைகள் வெளிப்படும்.புரியும்.
வனதேவதை என்று வனத்தை தெய்வமாக போற்றுவது சனாதன தர்மம்.
மரங்களை ஆலயங்களின் ஸ்தல வ்ருக்ஷமாக்கி மரங்களின் செடிகளின் மருத்துவ உண்மைகளை எடுத்துக் கூறுவது சனாதன தர்மம்.
மலைகளின் மீத்து ஆலயங்கள் அமைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பக்தர்களை  அறிவியல் ரீதியில் வரதம்,தவம் மௌனம் ,பிராணாயாமம் ,தோப்புக்கரணம்,கிரிவலம் அங்கப்ப்ரதக்ஷனம் என்று  உடல் ஆரோக்யத்திற்கு ஆன்மீக ரீதியில் அறிவியல் பூர்ண மாக வழிகாட்டுவது சனாதன தர்மம்.

பாரத நாடு அனைத்து வளமும் கொண்டது. அதனால் அமைதியான ஆன்மீக நாடு. வள்ளுவர் கூறியது போல் -நாடென்பது நாட வளத்தன என்ற இலக்கணம் கொண்டது சனாதன தர்ம பாரதம்.
அன்னியர் இங்குவந்து நாலனவைகளை அறிந்து புரிந்து ஏற்று ஏற்றம் அடைகின்றனர்,.வேள்வி அதில் வரும் புகையின் மதிப்பை ஆய்ந்து வெளிநாட்டினர் கூறிப் புகழ்கின்றனர். தொப்பிக்கரணம் ஒரு உடற்பயிற்சிக்கலையாக கர்பிக்கக்கத்தொடங்கியுள்ளனர்.திருநள்ளார் நவகோள்களின் ஈர்ப்பு  பற்றி வியந்துள்ளனர்.
பாரதம் மேற்கத்திய மோகத்தில் இருந்து விடுபட்டு நம் நாட்டின் சிறப்பை அறியச்செய்வதில் முயல்வதும் பிரார்த்தித்து சக்தி பெறுவதும் தான் இன்று அனைவருக்கும் தரும் செய்தியாக உணர்வு பெற்றேன்.

கருத்துகள் இல்லை: