சனி, நவம்பர் 05, 2011

thaay moli katinamaaka unarvathu en?

தாய் மொழி இந்த தலை முறையினருக்கு

தாய் மொழி என்பது ஆங்கில வழி வகுப்பு போதனா முறை வந்த பிறகு பேச்சு மொழியாக மட்டுமே மாணவர்கள் பயன் படுத்த விரும்புகின்றனர் .இலக்கியங்கள் ,இலக்கணங்கள் கடினமாக மாணவர்களால் உணரப்படுகிறது. இலக்கணத்திற்கு என்று ஒரு பாடநூல் ஒவ்வொரு வகுப்பிற்கு இருந்தாலும் அது மாணவர்களால் பயன் படுத்தாமல் புதிதாகவே உள்ளது.
இதன் காரணம் ஆங்கில வாக்கிய அமைப்பு தான்.ஒரு ஆங்கில வழி மாணவனை அணுகியபோது I,YOU,HE, SHE,IT,THAT THEY  WE ---WENT.தமிழில் அல்லது இந்திய மொழியில் முறையே  போனேன்,போனாய்,போனான்,போனாள்,
போனது ,போனார்,போனார்கள்,போனீர்கள்,போனோம்,
என்று பல வடிவம். ஆங்கிலம் எளிய மொழி.நான் பேசும்போது தமிழ் எளிதாக உள்ளது.ஆனால் இவ்வளவு வினை மாற்றங்களால் கடினம் என்றான்.ஆப்போதுதன் மார்வாடிகள் பேசும் தமிழ் நினைவு வந்தது.நாங்கள் போறான்.நீங்கள் வர்ரன் என்று.இதே நிலை தான் மற்ற இந்திய மொழிகளுக்கும்.ஆகையால் தமிழ் வழி அல்லது தாய் மொழி வழி படிக்க இந்திய  மாணவர்கள் கடினத்தை
உணருகிறார்கள்.மற்றவை வேலை வாய்ப்பு.தமிழக மொழிக்கொள்கையால் பலர் தமிழ் தாய் மொழியாக இருந்தாலும்  தமிழ் தெரியாத நிலை. இது ஒரு கவலைப்படும் படியான நிலை.

கருத்துகள் இல்லை: