ஹிந்தி பக்தி இலக்கியத்தில் கபீர் ஹிந்து மற்றும் முகலாயர்களால் சமமாக மதிக்கப்பட்ட கவி.அவரது தோஹை அதுதான் ஈரடி என்று மொழிபெயர்ப்பு.
கையில் ஜபமாலை,வாயிலோ இறை நாமம்,
மனமோ பத்து திக்கில் ,அது இறைவழி பாடா?!!
௨.)உன் இறைவன் உனக்குள்,பூவின் மணம் போல.
மணமிக்க கஸ்தூரி மான் வயிற்றிலே,,அதை அறியா மான் புல்வெளியில் தேடுமாம்,அறியா மான் போல் ,அலையாதே மனிதா.உனக்குள் இறைவனை அறிந்து கொள்.
௩.)கெட்டவனைத் தேடிச் சென்ற எனக்கு,கெட்டவனே கிடைக்கவில்லை.
என் மனதுக்குள் என்னையே ஆராய்ந்த போது,
என் போல் கேட்டவன் யாருமே இல்லை.
௪)எழுகடல் நீரை மையாக்கி,மரங்கள் அனைத்தையும் ,எழுதுகோல் ஆக்கி,
நிலம் முழுவதும் எழுதும் காகிதமாக்கி,
இறைவன் புகழ் பாட முயன்றேன்,அவை
போதுமானதாக இல்லை எனக்கு.(சிலர்குருவின் புகழ் என்கின்றனர்)
௫)இவ்வுலகம் உண்மையை ஏற்காது, தீயதை விரும்பி தேடிச் சென்று வாங்கும்.
பால் விற்பனையாளர் சத்துள்ள பாலை தெரு தெருவாக விற்கிறான்.மது விற்பவனோ ஓரிடத்தில்
அமர்ந்து ஓய்வாக விற்கிறான்.பொய்யை விரும்பி நாடிச்செல்லும் உலகமிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக