புதன், நவம்பர் 30, 2011

every thing in the modern age is old.not new.

பழமையே புதுமை. சிந்தித்தால் புரியும்.
உணர்ச்சிவசப்பட்டால் எரியும்.

1959 ஆம் ஆண்டு   வரை  பிறந்தவர்களுக்கும் 1960  முதல் 1970  வரை பிறந்தவர்களுக்கும்  1971  முதல் 1980 வரை பிறந்தவர்களுக்கும் 1981  முதல் 1985 வரை பிறந்தவர்களுக்கும்  மிகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மாற்றங்கள் மனித சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிவிடுகின்றன.
கண்ணகி பத்தினி தெய்வம் என்பதை ஆதரித்து மௌனமாய் இருந்த காலம் ஒன்று.இன்றைய தலைமுறை ஏற்க மறுத்து விடுகின்றன.
         கோவலன் கட்டிய மனைவியை விட்டு விட்டு மாதவியிடம் சென்று வறிய நிலையில் திரும்புவானாம்.கண்ணகி கன்னி கழியாமல் கற்புக்கரசியாக காத்திருப்பாளாம். தான் செய்த தவறை உணர்ந்து மன்னனும்  அரசியும் உயிரை விட்டுவிடுவார்களாம். கண்ணகி  மதுரையை எரித்து விடுவாள்.என்னே பெண்ணடிமை.இறுதிவரை மணநாள் முதல் மரணநாள் varai  துன்பம்.இக்காலத்தில் நீதிமன்றங்களில் விவாகரத்துக்கள். மறுமணம்.விதவைகள் துணிந்து பூவும் போட்டும் வைப்பது.பாரதியின்     கற்பனை நிறைவேறும் காலம்.
நீ ஒருத்தியைப்பார்த்தல் நான் ஒருவனைப்பார்ப்பேன் என்று துணிந்து கூறும் பெண்கள். ஆண் பாவம் என்று  பெண்களிடமிருந்து  ஆண்களை காக்க சங்கங்கள். கனியைப்பகர்ந்த பாண்டவர்கள் கதை.சீதையைக்கவர்ந்த ராவணின் கதை , செர்ஷாவைக்   கொன்று ஷாஹ்ஜஹான்  மும்தாஜைக்  கவர்ந்த கதை, பீஷ்மர் வென்று மூன்று அரசிளங் குமரிகளைக்கவர்ந்த கதை அனைத்தும்   நவீன முறையில் நடைமுறையில்  செய்தித்தாள்களில் காண்கிறோம். நாடு எங்கும் செல்ல வில்லை. பழமைகள் புதிய வடிவங்கள் எடுக்கின்றன. சோதனைக்குழாய் குழந்தைகள் ராமாயணத்திலும் உண்டு மகாபாரதத்திலும் உண்டு.விந்து தானமும் உண்டு.விதவைக் குழந்தைகளும் உண்டு . வாடகைத்தாய்களும் தொட்டில் குழந்தைகளும் உண்டு.பெட்டிக் குழந்தைகளும் உண்டு. எதுவும் புதுமை இல்லை.பழங்கதைகள் வரலாறுகள் தெரியாத படிக்காதவர்களுக்குத்தான் அனைத்தும் புதுமை.யாகத் தெரியும்.

கருத்துகள் இல்லை: