செவ்வாய், நவம்பர் 22, 2011

. Divine thoughts in modern age.

     இக்கால இறைவன்

சென்ற பதிவில் சனாதன தர்மம் பற்றிய என்னுள் எழுந்த எண்ணங்களை வெளியிட்டேன்.சனாதனதர்மத்தில் இச்சா  சக்தி,ஞான சக்தி ,கிரியாசக்தி என்பதை வலியுறுத்த ,கோயில்களில் கார்ப க்ரஹ சுவரில் பிரகாரத்தில்ஆரம்பம்,பின்புற மத்தியில் வலம் முடியும்  இடத்தில் இந்த மூன்றையும் தெய்வச் சிலைகளாக  வடித்து   இந்த மூன்றின் மகத்துவத்தை
 தெளிவு படுத்தியுள்ளனர். இந்த மூன்றையும் ஆங்கில கல்வி முறையில் கூறியபின்  நம் கல்வி முறையை அறியாமல்  ஆங்கில கல்வி முறையை  புகழ்ந்து ஏற்றுக்கொள்கிறோம்.இதற்கு நம் முன்னோர்கள்  கல்வி கற்கும் மாணவர்களை தரம் பிரித்தது தான்.

உள்ளத் தனையது  உயர்வு  என்றார் வள்ளுவர்.உள்ளத்தில் களங்கம் இருந்தால்
மனிதன் உயர முடியாது..ஆண்டவன் சனாதன த்ரமப்படி பாவ மன்னிப்பளித்து
முக்தி அளிப்பவர். ஆண்டவன் அருள் என்பது சிலருக்கு பிறக்கும் பொழுதே கிட்டும். சிலருக்கு 16   வயதில் கிடைக்கும். சிலருக்கு தன் பாவச்செயல்கள் உணர்ந்ததும்  முக்தி கிடைக்கும்.ஆண்டவன் பாவிகளைத் திருத்தி அவர்கள் பாவங்களை அவர்கள் மூலமாகவே  வெளிப்படுத்தி  புலம்பவைத்து  தெய்வ சிந்தனைகளைத்தூண்டி  மக்கள் மனதில் அன்பு,பாசம்,பண்பு,நேர்மை,சத்தியம்,
என்பதை உணரவைக்கிறார். இது சனாதன தர்மத்தில் தொடரும் கதை.இதற்கு பல எடுத்துக்காட்டுகள் கலியுகத்தில்  காணலாம்.
பகுத்தறிவு என்ற பார்வையில் திராவிட கழகம்.அதில் இருந்து இறைவனை  நம்பாத  தலைவராக அண்ணாதுரை.அண்ணாதுரையை தலைவராக ஏற்ற கருணாநிதி.அவரைப்பின்பற்றிய கண்ணதாசன் என்ற நீண்ட பட்டியல்.
அதில் முதலில் கடவுளை ஏற்று  ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்  என்ற குரல்
எழுப்பியவர்  அறிஞர் அண்ணா. அதற்கு முன்பே பராசக்தியில் ஆலயங்களை வெறுக்கவில்லை அதில் ஏமாற்றும் போலிவேடதாரிகளியும்,காமக்கொடூரர்களையும்,ஆன்மிகம் அறியா எமாட்ட்று பூசாரிகளையும் ,ஆன்மீக வழிமுறைகள்,உண்மையான மந்திரங்கள் ,உண்மை உள்ள மில்லா ஊழியர்களை வெறுக்கிறேன் என்று இறைவனை ஓட்டும் உதட்டில் கூறவில்லை என்றாலும்  உண்மை உள்ளத்தில் ஏற்றவர்.அவர் தந்தை சிவத்தொண்டர்.இன்று கனிமொழி கைது,
தேர்தல் தோல்வி என்றதும் அவர்கள் குடும்பங்கள் எத்தனை கோவில்களில் வழிபாடு செய்கின்றனர் என்பதற்கு புகைப்படத்துடன் வந்த செய்திகளே ஆதாரம்.
வாழ்க்கையில் மது மாது நாத்திக வாதமே கொண்ட கவிப்பேரரசர் கண்ணதாசன்  ஆன்மீகத்தொண்டு பைபிள் ,குரான் ,கனகதார தோத்திரம்,கீதை,
அர்த்தமுள்ள இந்துமதம் என ஒவ்வொரு தமிழனையும் இறையருள் பெறத் தூண்டியவர்.இன்றைய தமிழகத்தில் பக்தி வளரக் காரண மாணவர் .அவரை வெறுத்த ஆஸ்தீகர்கள் அவரைப்போற்றி வணங்கும் நிலைக்கு ஆளாக இறைவனருள் தான் .
மகாத்மா காந்தி தீய நண்பர்களின் சேர்க்கையால் தீய பழக்க வழக்கங்களுக்கு
ஆளானார். தேசத் தந்தையான அவர் தன் சுய சரிதையில் இறைவன் என் மனதின் தீய எண்ணங்களை   அகற்றி நல்வழிப்படுத்தினார் .

இது கலியுக இறைசிந்தனை எழுப்புதல் என்று இயேசு வழியில் கூறலாம்.
சுத்ந்திரப்போரட்ட நேரத்திலும் மனிதநேயம்  மனித ஒற்றுமை ஆகியவற்றை
வலியுறுத்த மத ஒற்றுமைக்காக மகாத்மாவின் பஜனைப்பாடல் ஒன்றை நினைத்தால்  உலகத்தில் மதக்கலவரம் ,இனக்கலவரம்இருக்காது.
   ரகுபதி ராகவ ராஜாராம், பதித்த பாவன சீதாரம் ,
ஈஸ்வர அல்லா தேரே நாம் சப்கோ சன்மதி தே பகவான்.
இறைவா ரகுபதி,ராமன், அல்லா, ஏசு  என்பதெல்லாம் உன் பெயர்களே.
எல்லோரின் மனதிலும் நல்ல அறிவைக்கொடு. அப்படிஎன்றால் கேட்ட அறிவு ஒன்று உண்டு. அதுதான் சாத்தான் வேதம்  ஓதுதல்.

ஆறறிவு படைத்த மனிதன் ஊழல்,கையூட்டு,கொலை ,கொள்ளை என அனைத்தும் அறிந்தும் செய்கிறான் என்றால் அவன் மனிதனா./.?
அவன்  திருந்த தண்டனை ஆண்டவன் கலியுகத்தில்  உணர்த்தவே தருகிறான்.

திருஞனசம்பர் ஞானப்பால் குடித்தது. ரமண மகரிஷி  திருவண்ணாமலை  சென்றது, அருணகிரிநாதர் கவித்துவம் பெற்றது என  தமிழகத்தில் ..அதே தமிழகத்தில் பெரியார்.கடவுள் இல்லை என்று கூட்டம் சேர்த்தவர்

. இருக்கிறார் என்று கூட்டம் சேர்த்தவர்களின் சித்து வேலைகள் ,காமக்களியாட்டங்கள்
சிறைவாசங்கள் ,அவமதிப்புகள்,கோவில் கர்பக்க்ரக லீலைகள் என்று சிலரால் ஒரு  துளி விஷம் போல் களங்கப் படுத்துபவர்கள் .  மின்சாரத்தால் பலன்கள் அதிகம்.அதில் மரண அபாயம் இருக்கிறது. அதே போல் நல்ல உலகத்தில் தீய சக்திகளும் உள்ளன.

கருத்துகள் இல்லை: