தீபாவளி தீபத்திருநாள் ,
ஒளி பரப்புஒலி மகிழ்ச்சி பட்டாசுகள்.
ஏன்?ஒழிந்தான் அசுரன் என்றா?
இல்லை.
மிளிர்கிறது மழலைகள்
முகம் அகம்.
புத்தாடைகளில்
இனிப்புகள் ஆம். கசப்புகள்
மன கசப்புகள் களைய.
இந்நாளின் மகிழ்ச்சி ,இன்றுபோல்
என்றும் எல்லோரின் மனத்திலும்
நினைத்து நிலைத்து அகலாமளிருக்க,
அன்பு ,பண்பு,உண்மை,நேர்மை
போன்ற அணையா விளக்கேற்றி,
தீமைகள் களைந்து,மறந்து
தித்திப்பான பண்டமாக மனம் ஆகி,
அகங்கள் மகிழ,அகிலத்தில் வாழ,
ஜகம் படைத்தோனை வணங்கி,
வாழ்த்துவோம் இஷ்ட மித்ர பந்துக்களை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக