பக்தா ! அறிவை அளித்தேன் ஆசை அடக்க!
அருணகிரி சரித்திரம் காட்டினேன்,
கோவலன் முடிவைக்காட்டினேன்
ரத்தக்கண்ணீர் கதை காட்டினேன்
கலைஞரின் கண்ணீர் காட்டினேன்
அஹல்யா கல்லானகதை காட்டினேன்
இதைஎல்லாம் படித்துசிந்திக்கும் அறிவையும் கொடுத்தேன்
விஷம்-அமிருதம்--மாட்டுப்பால்--கள்ளிப்பால்
முள் -பூ - அறிய வைத்த அறிவு ,
என் நாமம் ஜபித்தே ,
முழுசரணாகதிஅடையா வாழ்க்கை
நீ அமைத்த வாழ்க்கை.
என் தவறல்ல! சித்தர்களைபடி
சித்தம் . தெளியும்.
கடவுள் ஒரு தூசி எழுப்பி துன்பம் தருவார்,
பூமி நடுங்கச் செய்தும் துன்பம் அளிப்பார்.
கடல் அலை எழுப்பியும் துன்பம் தருவார்
கொசுக்கூட்டம் அனுப்பியும் துன்பம் தருவார்,
கடும் பஞ்சம் விளைவித்தும் இன்னல் தருவார்.
இவைகளைக்கண்டும்
மனிதன் மனிதனாகவில்லை என்றால்
இன்பமே இல்லை இந்த வையகத்தில்.
அவன் துதிபாடி மகிழ்ந்தோர் வையகத்தில்
மறந்தாலும் வாழ்வார்கள்
ஆனால் அவன் பெயர் சொல்லி ஏமாற்றும் கூட்டம்
இன்பத்தில் ஊறி துன்ப சாகரத்தில் உழல்வர் காண்.
இன்னாலில்லா இனம் உண்டா வையகத்தில்
இதை உணர்ந்து நேர் வழி செல்லா அறிவு ஜீவி
இந்நில உலகில் வாழ்வதே கடினம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக