ஆறுதல் கூறுவதும்
ஆலோசனை கூறுவதும்
அமர்ந்து கொண்டே
ஆனந்த சாகரத்தில் மூழ்குவதும்
ஆனந்தக் கோட்டை கட்டுவதும்
ஆகாயத்தில் பறப்பதும்
ஆண்டவன் அருள் பார்வை பெறுவதும்.
இச்சைகள் நிறைவேற வேண்டுமானால்
ஞானம் வேண்டுமே.
பெற்ற ஞானத்தை செயலாக்க வேண்டுமே.
குரங்காகப் பிறந்து
தூக்கணாங்குருவிக்கூடு கட்டமுடியுமா?
இயற்கை அறிவு வேண்டும்.
இயல்பாக கலைஞானம் வேண்டும்.
உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாக முடியாது.
குயிலின் இனிமை காகத்திற்கு வராது.
உலகமாயையில் முயற்சி திருவினையாகாது.
கபீர் கூறுகிறார்.....
எறும்பு அரிசி எடுத்துச் சென்றது.
வழியில் பருப்பு கிடைத்தது.
பருப்பு அரிசி இரண்டையும்
அதனால் எடுத்துச் செல்ல முடியாது.
மனிதன் எதிரில் லௌகீகம் அலௌகீகம் இரு வாழ்க்கை.
இரண்டையும் அனுபவிக்க முடியாது.
ஆசைகளால் மனிதன்
இயல்பாக வாழமுடியாது.
இறைவன் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு திறன் அளித்துள்ளான்.
அதனால் தான் ஆன்மீகம் பக்தி ஓங்கி
உலகளந்த உத்தமன் பின் செல்கிறது.
தியானம் மனக் கட்டுப்பாடு
தமக்களித்த இறையாற்றல்
இறை அருள்
அதை மீறி எதுவும் செய்ய முடியாது.
இதுதான் ஆண்டவனின் லீலை.
ஹிந்தியில் ஒரு நாவல்
"சப்ஹி நசாவத்ராம்கோசாயி."
ஒரு கொலைகாரன் திருப்தி வாழ்கிறான்.
அவன் மகன் அமைச்சர் ஆகிறான்.
கொலை கார்ன் தண்டனை பெறாமல் ஆனந்தமாக வாழ்ந்து புகழோடு இறைவனை அடைகிறான்.
அவனுக்கு தண்டனை இல்லை.
அனைவரையும் ஆட்டிவைப்பவன் ஆண்டவனே.
சே.அனந்தகிருஷ்ணன்.
சுயபடைப்பாளர்.சுய சிந்தனையாளர்.
இறைவனடிமை. மொழிபெயர்ப்பாளர்.
ஹிந்தி மொழி பரப்புனர்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.
ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக